ஆற்காடு வீராசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்? பின்னணி இது தான்!
சென்னை: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் கழிவறைக்கு செல்லும் போது கால் தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது மகனும் வட சென்னை எம்.பி.யுமான கலாநிதி வீராசாமி, சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருவதும் அவர் ஒரு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் என்பதும் கவனிக்கத்தக்கது.

திமுக சீனியர்
திமுகவில் தற்போது இருக்கும் சீனியர்களில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் ஆற்காடு வீராசாமி. கடந்த திமுக ஆட்சிக்காலங்களில் சுகாதாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். கருணாநிதியின் நிழல் போல் அவருடன் ஒன்றாக ஒரு காலத்தில் பயணித்தவர் ஆற்காடு வீராசாமி. இதனிடையே கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி வயது முதிர்வு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் வீட்டில் கழிவறைக்கு செல்லும் போது, கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து சென்னை வடபழநியில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக ஏற்கனவே ஆற்காடு வீராசாமி உடலளவில் தளர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பங்கேற்பு
மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற நிகழ்வில் தள்ளாத வயதிலும் வந்து அதில் கொலந்துகொண்டவர் ஆற்காடு வீராசாமி. மு.க.ஸ்டாலின் திமுகவின் பொருளாளராக வர வேண்டும் என வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், தன்னிடம் இருந்த அந்தப் பதவியை ராஜினாமாவும் செய்தவர் ஆற்காடு வீராசாமி. இதன் காரணமாக அவர் மீது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எப்போதுமே தனிப்பாசம் உண்டு.

நலம் விசாரிப்பு
மேலும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கூட, ஆற்காடு வீராசாமியை அவரது இல்லம் தேடிச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின். இந்தச் சூழலில், ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் முதலமைச்சருக்கும் தெரியப்படுத்தியிருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications