சீட் கிடைக்குமான்னு தெரியலை.. ஆனாலும் சிங்கிள் டீ குடிச்சுட்டு.. இந்த வயதிலும் அலற விட்ட துரைமுருகன்

துரைமுருகன் தொண்டர்களிடம் உற்சாகத்துடன் பேசி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த முறை சீட் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.. ஆனால், "திமுக"காரன்னா இப்படித்தான் இருக்கணும் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்த ஆரம்பித்துவிட்டார் துரைமுருகன்.

திமுகவில் இப்போதைக்கு இருக்கும் மூத்த தலைவர் துரைமுருகன்தான்.. இவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் உள்ளது.. இதற்காக சிகிச்சையும் எடுத்து கொண்டு வருகிறார்.

72 வயதை தாண்டி உள்ளதால், அவரால் முன்பு போல பிரச்சாரம் செய்ய முடியுமா? பேசாமல் கட்சி பொறுப்பை கழக ஆபீசில் இருந்தே கவனித்து கொள்ளட்டுமே என்பது போன்ற அக்கறை நிறைந்த யோசனைகள் திமுக தலைமையிடம் நிலவுவதாக செய்திகள் கசிந்தன.

திமுக

திமுக

அதனால், இந்த முறை இவருக்கு சீட் தரப்படுவது சந்தேகம் என்றும் கூறப்பட்டு வருகிறது.. மற்றொரு புறம், கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த முறை வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், துரைமுருகன் தன் பணியில் தீவிரமாகவும், பிஸியாகவும், மும்முரமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க தொடங்கிவிட்டார்...

 துரைமுருகன்

துரைமுருகன்

அதுமட்டுமல்ல, தன் கட்சிக்காரர்களை தட்டி எழுப்பும் வகையில் உத்வேகம் நிறைந்த வார்த்தைகளை அவர்களுக்கு சொல்லி குஷிப்படுத்துகிறார். அப்படித்தான், காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகர், சேண்பாக்கம் பகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், காட்பாடியில் நடந்தது... இதில், துரைமுருகன் பேசும்போது, "பல தேர்தல்களை பார்த்த நான்.. நைட், பகல், பார்க்காமல் தொகுதியை சுற்றி சுற்றி தேர்தல் பணிகளில் ஈடுபடுவேன்...

 தென்மாவட்டம்

தென்மாவட்டம்

ஆனால், இந்த தேர்தல் அப்படி இல்லை.. கட்சியின் பொது செயலராக உள்ளதால், தென் மாவட்டங்களில் தேர்தல் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால், ஒவ்வொருவரும் துரைமுருகனாக மாறி, வேலை செய்வதாக ஒப்புதல் தந்திருக்கிறீர்கள்.. பூத் கமிட்டியினர், 100 ஓட்டுக்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்...

தவிடுபொடி

தவிடுபொடி

ஒரு டீ குடிச்சிட்டு, நைட் முழுக்க வேலை செய்பவன்தான் திமுக காரன்.. பண பலம், படை பலத்தை ஆளும் கட்சியினர் காட்டலாம்.. அதை தவிடுபொடியாக்கும் வல்லமை, திமுகவுக்கு மட்டுமே உள்ளது.. திமுக வெற்றி பெறுவதை, எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+