துரைமுருகனுக்கு என்ன ஆச்சு?.. அப்பல்லோவில் பரிசோதனை.. நலமுடன் இருப்பதாக தகவல்!
அப்போலோ ஆஸ்பத்திரியில் துரைமுருகன் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென ஆஸ்பத்திரியில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர் துரைமுருகன். ஒருபக்கம் உணர்ச்சிவசப்படுவது இருந்தாலும், மறுபக்கம் அவருக்கு இருதய தொந்தரவும் இருக்கிறது.

கருணாநிதி இறந்த சமயத்தில் ஆகட்டும், வேலூர் தேர்தலுக்கு பிறகு ஆகட்டும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. தனது மகனை தேர்தல் களத்தில் நிறுத்த முடியவில்லை என்ற மன உளைச்சலிலும் இருந்தார் துரைமுருகன். இதற்கு பிறகு காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், காய்ச்சல் மட்டும் குணமாகாமல் ஏறி, இறங்கி கொண்டிருந்தது.
அதனால், சென்னையிலேயே தங்கி அப்போல்லோவில் உடல்நிலையை சோதனை மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் வந்தன. ஒரு கட்டத்தில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவருக்கென ஒரு அறை ஒதுக்கப்பட்டு, அங்கே சென்று செக்கப் செய்வதும் வீடு திரும்புவதுமாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வந்தன. இதற்கு பிறகுதான் சிறிது நாட்களாக முன்னர் உடல்நிலை ஓரளவு தேறியது.
இடைத்தேர்தல் பிரச்சாரங்களிலும் உற்சாகத்துடனே கலந்து கொண்டார். இந்நிலையில் திரும்பவும் துரைமுருகன் அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இதனால் திமுகவினர் சோகமடைந்துள்ளனர். ஆனால், உடல் சோர்வு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகலில் ஆஸ்பத்திரி சென்றால், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலேயே காலை நேரத்தில் செக்-அப்புக்கு துரைமுருகன் சென்றிருப்பதாகவும், இன்னும் கொஞ்ச நேரத்தில் நலமுடன் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications