டி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா; மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்
சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சட்டசபை தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்ற வேட்பாளர்கள், தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஶ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதராவ் கொரோனாவுக்கு பலியாகினார். இந்த நிலையில் அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
எனது தந்தையார் திரு டிஆர்பாலு அவர்களுக்கு #கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.
— T R B Rajaa (@TRBRajaa) April 14, 2021
கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
துரைமுருகனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் தினமும் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று துரைமுருகன், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இதனால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதனிடையே திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி. ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், எனது தந்தையார் திரு டிஆர்பாலு அவர்களுக்கு #கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications