குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் எப்போது? மூத்த தலைவர் டிஆர்.பாலு சொன்ன முக்கிய தகவல்
சென்னை: திமுக கூட்டம் ஒன்றில் பேசிய திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு, மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
ஏற்கனவே, கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதற்கேற்ப அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பொதுக்கூட்டம்
அதேபோல திமுக சார்பிலும் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தாம்பரம் சண்முகம் சாலையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டும், திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதையொட்டி சாதனை விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.

பீனிக்ஸ் பறவை
அப்போது அவர் பேசுகையில், "இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்பட்டாலும், பீனிக்ஸ் பறவை போல மீண்டும் ஆட்சி அமைத்த பெருமை கருணாநிதியைச் சேரும். திராவிட மாடல் ஆட்சி என்பது மாநில சுயாட்சி பெறும் ஆட்சி. சமயசார்பின்மையே திராவிடமாடல் ஆட்சி. 505 தேர்தல் வாக்குறுதிகளில் 320 வாக்குறுதிகள் ஒரே ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் திட்டம்
ஆனால் ஆயிரம் ரூபாய் தரவில்லை என்று வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி வருகின்றனர். ஆயிரம் ரூபாய் தரமாட்டோம் என எங்கேயாவது சொன்னோமா. இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் நிச்சயமாக மற்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதேபோல குடும்ப பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் நிறைவேற்றப்படும்.

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை எப்படி ஏறுகிறது என எனக்குப் புரியவில்லை. நான் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்துள்ளேன். ஆனால் பெட்ரோல் விலை ஏற்றத்தில் மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. 8 வருட ஆட்சியில் 26.5 லட்சம் கோடி ரூபாய் வரியாக மட்டுமே மத்திய அரசு பெற்றுள்ளது. மொத்தம் ஒரு லிட்டர் பெட்ரோலில் 26 ரூபாய் 50 காசு மத்திய அரசின் செஸ் வரி என்ற பெயரில் மத்திய கஜானாவிற்கு செல்கிறது. இதில் இருந்து மாநில அரசுக்கு எந்த ஒரு ரூபாயும் வந்து சேருவதில்லை. இது ஏமாற்று வேலை இல்லையா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications