Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமதாஸும் அன்புமணியும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கணும்! திமுக எம்எல்ஏக்கள் வக்கீல் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு திமுக எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 24 மணி நேரத்தில் இருவரும் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை பாயும் என குறிப்பிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கும், சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியனுக்கும் தொடர்பிருப்பதாக ராமதாஸும் அன்புமணியும் கூறியிருந்த நிலையில் திமுக எம்பியும் வழக்கறிஞருமான பி.வில்சன் வாயிலாக எம்எல்ஏக்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

kallakurichi Liquor Death Tamil Nadu ramadoss

இந்த வக்கீல் நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் ராமதாஸும் அன்புமணியும் தாங்கள் பேசியது தவறு என நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அவ்வாறு கிடைக்கும் பணத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க போவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கள்ளக்குறிச்சியில் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் பலியாகிவிட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் இருப்பவர்களையும் இறந்தவர்களின் உறவினர்களையும் அரசியல் கட்சியினர் பார்வையிட்டு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு, உதயநிதி ஆகியோர் அங்கேயே முகாமிட்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமி, திருமாவளவன், அண்ணாமலை, டிடிவி தினகரன், அன்புமணி, கமல்ஹாசன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு திமுக எம்எல்ஏக்களை ராமதாஸும் அன்புமணியும் தொடர்புபடுத்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அறிவிக்கப்படாத முதல்வராகவே செயல்பட்டு வந்த வசந்தம் கார்த்திகேயனும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனும் தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வணிகர்களின் பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிறது என ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் உடந்தையாக இருந்ததாக வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியனை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியிருந்தார். இந்த நிலையில்தான் சென்னை தலைமைச் செயலகத்தில் ரிஷிவந்தியம் சட்டசபை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்எல்ஏ உதய சூரியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவதூறான குற்றச்சாட்டை பாமக நிறுவனர் ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் வைத்துள்ளனர். இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட நினைக்கும் இவர்கள் இருவருக்கும் எங்களது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் பாமகவை மக்கள் புறக்கணித்த விரக்தியில் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இப்படி பேசி வருகிறார்கள். கள்ளச்சாராய விவகாரத்தில் எங்கள் மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் பொது வாழ்வில் இருந்து வெளியேறுகிறோம்.

அது போல் அதை நிரூபிக்க தவறினால் அவர்கள் அரசியல் வாழ்வில் இருந்து விலகத் தயாரா என கேள்வி எழுப்பினர். மேலும் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்த போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் யாருமே இறக்கவில்லை, மருத்துவர்களிடம் விசாரித்த போது கூட நாங்கள் அவர்கள் என்ன சாப்பிட்டிருக்கிறார்கள் என சோதனை செய்த பிறகுதான் சொல்ல முடியும் என்றார்கள்.

அந்த சமயத்தில் இறந்த மூவரும் மருத்துவமனையில் இல்லை. அவர்கள் வீட்டிலேயே இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுடன்தான் நாங்கள் இருந்து வருகிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகள், ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். கைது செய்யப்பட்ட கண்ணுக்குட்டியின் வீட்டில் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது குறித்து கேட்கிறீர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் யாரும் திமுக நிர்வாகிகள் இல்லை. தேர்தல் நேரத்தில் பனை மரம், தென்னை மரம் என எல்லாவற்றிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அதிமுககாரர் வீட்டிலும் கூட திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு செல்வார்கள். அது போல் திமுககாரர் வீட்டில் தேர்தலின் போது அதிமுக ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதை வைத்தெல்லாம் திமுகவுடன் தொடர்புபடுத்தி பேச முடியாது என தெரிவித்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+