திமுக மாநில நிர்வாகி வி.ஜெயன் கட்சியில் இருந்து விலகல்.. திண்டுக்கல் மாவட்ட திமுகவில் சலசலப்பு!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த திமுக மாநில நிர்வாகி வி.ஜெயன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நெருக்கமான ஆதரவாளராக அறியப்பட்ட ஜெயன், திமுகவில் இருந்து விலகி இருப்பது திண்டுக்கல் மாவட்ட திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வி. ஜெயன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், கம்பம் சட்டமன்றத் தொகுதியின் பார்வையாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

DMK Setback in Dindigul Close Associate of I Periyasamy V Jayan Quits Party

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 35 ஆண்டுகளாக நான் இணைந்து பயணித்து வந்த திமுகவில் எனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கனத்த இதயத்துடனும், மிகுந்த மன வருத்தத்துடனும் விலகி கொள்கிறேன்.

இத்தனை ஆண்டுகளாக எனக்கு கட்சிப்பணியாற்றும் வாய்ப்பினை வழங்கிய கட்சியின் தலைவருக்கும், துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகிகளுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியினையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட திமுகவில் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டு வந்த வி.ஜெயன், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடந்த சில மாதங்களாகவே கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் திமுகவில் இருந்து விலகியுள்ள ஜெயன் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+