தலைவரே தோற்கிறார், நீங்க மட்டும் ஜெயித்தது எப்படி? சேகர்பாபுவை அலறவிட்ட துர்கா ஸ்டாலின்! பதவி காலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற கூட்டம் முடிந்ததும் துபாய்க்கு பறந்து விட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அவர் சென்னை திரும்பியதும் திமுகவின் மா.செ.க்கள் சிலர் மாற்றப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு மா.செ.க்களிடம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, சென்னையில் இந்த அதிரடி மாற்றம் நடக்கலாம் என்கிறார்கள். இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் மா.செ.வுமான சேகர்பாபுவின் பதவிக்கு சிக்கல் ஏற்படும் என்றும் சொல்கின்றனர்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் தனது கணவர் ஸ்டாலின் தோற்றுப் போனதை அம்மையார் துர்கா ஸ்டாலினால் இப்போது வரை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவரது தோல்விக்கு முழு காரணம் சேகர்பாபு தான் என துர்காவிடம் கொடுக்கப்பட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளும் தெரிவிக்கின்ற னவாம்.

Durga Stalin

இதனை வைத்து சமீபத்தில் சேகர்பாபுவை வீட்டுக்கு அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் துர்கா ஸ்டாலின். சேகர்பாபுவிடம், ''கொளத்தூர் தொகுதி மட்டுமல்ல, சென்னையின் 16 தொகுதிகளும் தலைவர் (ஸ்டாலின்) தொகுதிகள் தான். அனைத்திலும் விஜய்யை ஓடஓட விரட்டி அடித்து ஜெயித்துக் கொடுக்கிறேன். ஆனால் , மொத்த சென்னையின் தேர்தல் பொறுப்பையும் என்னிடம் கொடுங்கள் என்று நீங்கள் கேட்டதினால் தானே உங்களிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் கொளத்தூர் தொகுதி உட்பட சென்னையில் திமுகவுக்கு எதிர் அலை வீசுகிறது என எங்களூக்கு கொடுக்கப்பட்ட அறிக்கைகளை உங்களிடத்தில் சொன்ன போதெல்லாம், அதையெல்லாத்தையும் தூக்கிப் போடுக்க அண்ணி. அதெல்லாம் வெறும் குப்பை. அவரவர் விறுப்பங்களுக்கு ஏற்ப உங்களிடம் ரிப்போர்ட் தந்துள்ளனர் . தலைவர் தொகுதி பின்ண்டைவு என சொல்கிற அறிக்கையெல்லாமா நீங்கள் நம்புவீர்கள். தலைவரே தோற்பார் என சொல்லும் அறிக்கை எப்படி உண்மையாக இருக்கும் அண்ணி? என்றெல்லாம் நீங்கள் சொன்னீர்கள் பாபு.

ஆனாலும் சீரியஷாக கவனிக்கச் சொன்னோம். நீங்களும் அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். கவலைப்படாமல் இருங்கள். எந்த கோவிலுக்கு போகணும்னு நீங்கள் நினைக்கிறீர்கள்? சொல்லுங்கள் நான் ஏற்பாடு செய்கிறேன் என சொன்னீர்கள். நீங்கள் சொன்ன அனைத்தையும் நாங்கள் நம்பினோம். ஆனால், தேர்தல் ரிசல்ட் என்னாச்சு ?

நீங்களும் உதயநிதியும் மட்டும் தான் ஜெயித்தீர்கள். எல்லோரும் தோற்றுப் போனார்கள். தலைவரும் தோற்றுப்போனார். எங்களுக்கு கொடுத்த நம்பிக்கையும் நீங்கள் சொன்ன வார்த்தைகளும் எங்கே? படிச்சி படிச்சி சொன்னேனே நான், தலைவர் தொகுதியை கவனியுங்கள் கவனியுங்கள்னு. இப்பத்தான் தெரியுது நீங்கள் கவனிக்கவே இல்லைன்னு. எனக்கு கிடைத்த ரிப்போர்ட் சொன்னதை குப்பைன்னு சொன்னீங்க. அப்போது நீங்க சொன்ன வார்த்தைத்தான் குப்பைன்னு இப்பத்தெரியுது.

ஆமா, தலைவரே தோற்கிறாரு. ஆனா, நீங்க மட்டும் ஜெயிக்கிறீங்களே எப்படி ? தலைவர் தோத்து, உதயநிதி ஜெயித்து, திமுக ஆட்சியை பிடிச்சிட்டா உதயநிதியை சி.எம். ஆக்குவாங்க. அவரை உங்க பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்டம் போடலாம்னு திட்டமிட்டுத்தான் தலைவரை தோக்கடிச் சீங்களா? எங்களுக்கும் நம்பிக்கைத் துரோகம் பண்ணீட்டீங்க. இதை என்னால மறக்கவும் முடியாது ; மன்னிக்கவும் முடியாது என நிறைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து சேகர்பாபுவை திட்டித் தீர்த்துள்ளார் துர்கா ஸ்டாலின்.

அதைக்கேட்டு செய்வதறியாமல் திகைத்து நின்ற சேகர்பாபு, நான் எந்த துரோகமும் செய்யலை அண்ணி என்று சொல்லிக்கொண்டே, துர்கா ஸ்டாலின் காலில் விழுந்துள்ளார். ஆனால், அதை ஏற்க மனமில்லாமல் விலகி ய துர்கா ஸ்டாலின், சேகர்பாபுவை வெளியே போ என கோபமாக துரத்தி விட்டார். அவர் வெளியேறிய போதும் துர்காவின் கோபம் குறையவில்லை.

இந்த நிலையில், அன்றைய தினம், வீட்டுக்கு ஸ்டாலின் திரும்பியதும், சேகர்பாபுவை திட்டித்தீர்த்த கோபத்தை அவரிடம் கொட்டியிருக்கிறார் துர்கா ஸ்டாலின். அவரிடமிருந்து மா.செ.பதவியை பறித்து விட்டு, நம்முடைய விசுவாசிகளில் ஒருவருக்கு கொடுங்கள் என்று சொல்லியுள்ளாராம் துர்கா ஸ்டாலின் என்கிறார்கள் திமுகவின் மேலிட தொடர்பாளர்கள்.

சேகர்பாபுவிடமிருந்து மா.செ. பதவி பறிக்கப்பட்டால் அரசியலிருந்து விலகுவாரா? அல்லது அவர் ஆன்மீகவாதி என்பதால் ஆன்மீக கட்சியான பாஜகவில் இணைவாரா? என்கிற கேள்விகளும் திமுக அரசியலில் கேட்கப்படு கிறது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+