இனி அண்ணாமலை கேம்! கதறுது திமுக..ஒவ்வொன்றுக்கும் ஸ்டாலின் பதில் தானாக வரும்-பாஜக எஸ்ஆர் சேகர் புதிர்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் இனி ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலைமை வரும் என்று தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர் புதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் எஸ்.ஆர். சேகர் பதிவிட்டிருப்பதாவது: அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் !

கதறுது திமுக: பெரிய உலகத் தலைவராக நினைத்துக் கொண்டு இருந்த ஸ்டாலினின் உண்மை முகத்தை அண்ணாமலை வெளிக்கொண்டு வருகிறார் ! தான் எதோ இன்டர்நேஷனல் தலைவர் போல , நேரடியாக மோடியை விமர்சித்துக் கொண்டு இருந்தார் ஸ்டாலின் ! ஆனால் மோடியின் போர்ப்படை தளபதியான அண்ணாமலை அவர்கள் , ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்து , ஒட்டு மொத்த திமுகவையும் தனி ஆளாக கதற விட்டுக்கொண்டு இருக்கிறார் !
திமுகவுக்கு பயம்: ஆனாலும் அண்ணாமலைக்கு ஒரு முறை நேரடியாக பதில் சொல்லி விட்டால், பிறகு அவர் முன்வைக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் என்று திமுக பயந்து கொண்டு அமைதியாக இருந்தது ! ஆனால் பொறுமையை கைவிடாத அண்ணாமலை .... அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல, தொடர்ச்சியாக ஆதாரங்களோடு #திமுக மீது குற்றச்சாட்டை வைத்துக் கொண்டே இருந்தார் !
அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் !
— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) October 4, 2023
பெரிய உலகத் தலைவராக நினைத்துக் கொண்டு இருந்த ஸ்டாலினின் உண்மை முகத்தை அண்ணாமலை வெளிக்கொண்டு வருகிறார் !
தான் எதோ இன்டர்நேஷனல் தலைவர் போல , நேரடியாக மோடியை விமர்சித்துக் கொண்டு இருந்தார் ஸ்டாலின் !
ஆனால் மோடியின்…
செந்தில் பாலாஜி கேஸ்: எவ்வளவு நாள் தான் கேட்காதது போலவே ஸ்டாலின் நடித்துக் கொண்டிருப்பார் ? செந்தில் பாலாஜி விடயத்திலேயே, அண்ணாமலை பற்ற வைத்த நெருப்புக்கு மத்திய பாஜகவை விமர்சித்து வீடியோ விட்டார் ஸ்டாலின் ! ஆனால் இப்பொழுது தொடர்ச்சியாக அண்ணாமலை அடித்துக் கொண்டிருக்கும் அடியில் ஆடிப் போய் உள்ளது திமுக & கோ. அண்ணாதுரை பற்றி ஒரு வரலாற்று உண்மை அண்ணாமலை பேசியது பற்றி முதல் முறையாக வாய் திறந்தார் ஸ்டாலின் !
மருதமலை விவகாரம்: அதேபோல திமுகவின் நாத்திக கொள்கையால், மருதமலை முருகன் கோயிலுக்கு எம்ஜிஆர் செல்ல முடியாமல் இருந்தது பற்றி அண்ணாமலை கூறியிருந்தார் ! அதைப் பற்றியும் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டியது ஆகிவிட்டது !இது ஒரு ஆரம்பம் தான் !! இனிமேல் அண்ணாமலை வைக்கப் போகும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், விடப் போகும் ஒவ்வொரு அறிக்கைக்கும், பேச போகும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஸ்டாலின் இடமிருந்து பதில் தானாக வரவைக்கப்படும் ! அண்ணாமலை வர வைப்பார் ! அண்ணாமலையாருக்கு அரோகரா நன்றி. இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி!












Click it and Unblock the Notifications