Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் குறித்து விமர்சனம்.. அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுகதான் கண்டிக்கனும்.. கே எஸ் அழகிரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ் அழகிரி, அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுகதான் கண்டிக்கனும் என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சி என்பது திமுக கூட்டணியில் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிறங்கும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியிலும் காங்கிரஸ் - திமுக கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 DMK should condemn Minister Rajakannappan Congress leader KS Alagiri

நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் நடைபெற்றது. மீண்டும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சி குறித்து அண்மையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை காங்கிரஸ் செய்வதே இல்லை: அதாவது புதுச்சேரியில் மாநில திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்று பேசினார். அப்போது ராஜகண்ணப்பன் பேசுகையில், "புதுச்சேரியில் திமுக வளர வேண்டும். திமுக ஆட்சியை பிடிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி நம்முடன் உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகவும் பழமையான கட்சியாக இருக்கிறது.

தற்போது அந்த கட்சி பலத்தை இழந்து வருகிறது. காங்கிரஸை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. காங்கிரஸை பொறுத்த வரை சீட் பெறுவதற்காகத்தான் கட்சி நடத்துகிறார்கள். அதனால் என்ன பயன்? கடினமாக உழைக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இருப்பினும் இந்த 2 விஷயங்களை காங்கிரஸ் கட்சி செய்வதே இல்லை. ஆனால் தேர்தல் நெருங்கும்போது காங்கிரஸ் கட்சி வந்துவிடும்.

திமுக தான் கண்டிக்கனும்: இது மக்கள் மத்தியில் வேலை செய்யாது'' என பேசினார். அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது குறித்து கே எஸ் அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய கே.எஸ் அழகிரி கூறியதாவது:-

"அவருக்கும் சீட் வேண்டும். எல்லாருக்கும் சீட் வேண்டும். அவருக்கான பதிலை அந்த கட்சி தான் சொல்ல வேண்டும். எங்கள் கட்சியில் யாரும் சொன்னால் நாங்கள் பதில் சொல்லுவோம். அவர்கள் கட்சியில் இப்படி சொன்னால் அவர்கள் தான், இது கட்சியின் விதிகளுக்கு முரண்பாடானது. இப்படி பேசியிருக்க கூடாது என்று அவர்கள் தான் சொல்லியிருக்க வேண்டும்" என்று பதில் அளித்தார்.

 DMK should condemn Minister Rajakannappan Congress leader KS Alagiri

மத சார்பற்ற கட்சி: மேலும் அவர் கூறியதாவது:- சென்னையில் திமுக மட்டும் தான் போட்டியிட வேண்டுமா காங்கிரசுக்கு பெற்று தாருங்கள் என்று என்னிடம் நிர்வாகிகள் என்னிடம் கேட்கிறார்கள். சென்னையில் போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளேன். ஒரு தொகுதியில் ஒரே கட்சி மீண்டும் மீண்டும் போட்டியிட்டால் மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு இருக்காது. காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனை திமுக கண்டிக்க வேண்டும்.

பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ் ஒரு மத சார்பற்ற கட்சி. காந்தியை பார்த்து கேட்ட போது அவர் கூறினார், 'இந்திய எல்லைக்குள் வாழ்கிறவர்கள் அனைவரும் இந்தியர்களே' என்றார். அது தான் காங்கிரசுடைய லட்சியம். நாங்கள் அசாமிலோ, வங்காளத்திலோ இந்த மக்கள் யார் என்று கேட்டால் நாங்கள் இந்தியர்கள் என்று சொல்வோம். இதே, பாஜகவினரிடம் கேட்டால், இவர் அசாமி, இவர் வங்காள இந்து, சீக்கியர்கள் என்று சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+