திகவுடன் உறவை முறியுங்கள்.. இல்லையெனில் அவ்வளவுதான்.. திமுகவிற்கு எச்.ராஜா எச்சரிக்கை!
திகவுடன் திமுக உடனடியாக உறவை முறிக்க வேண்டும், இல்லையென்றால் திமுக மிக மோசமான விளைவை சந்திக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: திகவுடன் திமுக உடனடியாக உறவை முறிக்க வேண்டும், இல்லையென்றால் திமுக மிக மோசமான விளைவை சந்திக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ராமருக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இதில் ராமருக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. சீதை புகைப்படம் எடுத்து செல்லப்பட்டது, இது மிகவும் தவறு என்று ரஜினி குறிப்பிட்டார்.
நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்றுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரஜினி காந்த்
இந்த நிலையில் ரஜினிகாந்த் கருத்து சர்ச்சை குறித்தும், திமுக - திக இடையிலான உறவு குறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார். அதில், பெரியாரை பற்றிய ரஜினியின் பேச்சுக்கு நிறைய ஆதாரம் உள்ளது. பெரியார் இந்து கடவுள்களை அவமதித்து பேசி இருக்கிறார். 1971ல் அவர் இந்து கடவுள்களை அவமதித்தார். இதற்கான ஆதாரம் நிறைய இருக்கிறது. அதைத்தான் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.

தவறு இல்லை
ரஜினிகாந்த் எதையும் தவறாக பேசவில்லை. ஒரு அநாகரீகமான செயலை ரஜினி சுட்டிக்காட்டி பேசினார். அதற்கு ஆதாரமும் இருக்கும். அப்படி இருக்கும் போது, அது எப்படி தவறாகும். இந்து மதத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இந்துக்கள் இனியும் திகவினரின் கருத்துக்களை பொறுமையாக கேட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

திமுக எச்சரிக்கை
திமுக உடனடியாக திகவுடன் உள்ள உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க விரும்புகிறார்கள். திமுக இதற்கு மோசமான விளைவுகளை சந்திக்கும். பாஜக மிக கடுமையான பதிலடி கொடுக்கும். இந்துக்கடவுள்களை திகவினர் இழிவு படுத்தி உள்ளனர். நாங்கள் நீதிமன்ற படியேற தயாராக இருக்கிறோம்.

நீதிமன்றம் செல்வோம்
நாங்கள் நீதிமன்றம் சென்றால் திகவினர் சிறை செல்வார்கள். இந்து கடவுளை இழிவுபடுத்தி எதிர்வினை பெற்ற வீரமணி மன்னிப்பு கேட்கவில்லை. அவர் செய்த தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அப்படி இருக்கும் போது அவர் ரஜினியை மன்னிப்பு கேட்க சொல்வது தவறு. ரஜினிக்கு மன்னிப்பு குறித்து பாடம் நடத்த கி. வீரமணிக்கு தகுதி இல்லை, என்று எச். ராஜா குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications