விஜய்யை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி உள்ளதா? முதல்வருக்கே தெரியாமலா நடக்கது? விளாசிய திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரு சுற்றறிக்கைகளை அனுப்பி பின்னர் அதனை திரும்பப் பெற்றுள்ளது. இதனை விமர்சித்துள்ள திமுக, சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

திண்டுக்கல் குஜிலியம்பாறை தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தொண்டர்களின் விவரங்களை சேகரிக்க குஜிலியம்பாறை வட்டாட்சியர் உத்தரவிட்டது பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இதையடுத்து, சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டதோடு, வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

DMK asks TVK government

திமுக விமர்சனம்

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபடுவதை தடை செய்யும் வகையில் உத்தரவு ஒன்று வெளியானது. இதற்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து சில மணி நேரங்களில் விஜய் அரசு பின்வாங்கியது. ஒரே நாளில் விஜய் அரசின் இந்த தகிடுதத்தங்களுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. திமுக இவ்விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது:-

"நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, "திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல்

இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில் சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக த.வெ.க அரசு பின்வாங்கியுள்ளது.

அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா? ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.. த.வெ.க அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?" என்று கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+