திமுக ஏன் பாஜகவிடம் சாஃப்ட் பாலிடிக்ஸ் செய்கிறது? காங்கிரஸை அதிர விட்ட பலே ப்ளான்! விஜய்க்கு 3 லாபம்
சென்னை: "திமுக தேசிய அளவிலான இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் முடிவை எடுத்தது. இது காங்கிரஸிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 22 எம்பிக்களைக் கொண்டுள்ள திமுக, தேசிய அளவில் பாஜகவுடன் ஒரு மென்மையான போக்கைக் கையாண்டு மத்திய அரசின் அழுத்தங்களில் இருந்து தற்காத்து கொண்டு வருகிறது" என்று மூத்த அரசியல் விமர்சகர் ப்ரியன் கருத்து தெரிவித்துள்ளார்.
NEWS FOCUS TAMIL சேனலுக்கு பேட்டி தந்துள்ள ப்ரியன், "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக கூட்டணி உடைந்ததற்கு, கூட்டணிக் கட்சிகள் மீது மட்டும் குற்றஞ்சாட்ட முடியாது... திமுகவின் அணுகுமுறையிலும் இதற்கான காரணங்களைத் தேட வேண்டும். கடந்த 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் தொடர் வெற்றிகளைப் பெற்றதால், கொள்கை ரீதியாகத் தங்களுடன் இருக்கும் கட்சிகள் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள் என்ற அதிகப்படியான நம்பிக்கையில் திமுக செயல்பட்டது.

திமுக, காங்கிரஸ் மனக்கசப்பு
ஆனால் விஜய் தலைமையில் தவெக ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்ததும், கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஒரு மாற்று வாய்ப்பாக தெரிந்தது. இதன் விளைவாக, தேர்தலில் காங்கிரஸும் பிற கூட்டணிக் கட்சிகளும் அதிக தொகுதிகளையும் ஆட்சியில் பங்கையும் கேட்க தொடங் விட்டன..
திமுக ஆட்சியில் பங்கு தர மறுத்ததோடு, 2 கூடுதல் இடங்களை மட்டுமே ஒதுக்கியது. இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அடிமட்டத்தில் பெருமளவு கசப்புணர்வு ஏற்பட்டது. பாதி பேர் தவெகவுக்கு ஓட்டுப்போடும் மனநிலைமைக்கு வந்து விட்டார்கள்.. மாணிக்கம் தாகூர் போன்றோர் வேலையே செய்யவில்லை.. அப்போது தவெகவுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதே உண்மை..
விசிக, தேமுதிக சீட் விவகாரம்
நீண்டகால தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்குக் கடுமையான போராட்டத்திற்கு பின் 8 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், புதிதாக வந்த தேமுதிகவிற்கு 10 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் திமுக வழங்கியது.
பல வருடங்களாக கூடவே பயணித்தக் கட்சிகளை விட புதிய கட்சிக்கு முன்னுரிமை அளித்த திமுகவின் நடவடிக்கை, தோழமைக் கட்சிகளுக்கு மிகுந்த அதிருப்தியைத் தந்து விட்டது. திமுகவின் இந்த நெகிழ்வற்ற அணுகுமுறையால், பல தோழமைக் கட்சி நிர்வாகிகள் தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் நிலை உருவானது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, திமுக மீதிருந்த நீண்டகால அதிருப்தியைப் பயன்படுத்தி, கட்சிக்குள் ஒரு திமுக எதிர்ப்பு கும்பல் உருவானது. அவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி 35 முதல் 40 இடங்களைக் கேட்கும் சூழலை உருவாக்கினார்கள்.. இதையடுத்து, தமிழக அரசியலில் விஜய்யை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த நினைத்த காங்கிரஸ், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த திமுக போன்ற பெரிய மாநிலக் கட்சியின் ஆதரவு எவ்வளவு அவசியம் என்பதை சிந்திக்க தவறிவிட்டது.
22 திமுக எம்பிக்கள்
இதன் காரணமாக, திமுக தேசிய அளவிலான இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் தனித்து இயங்கும் முடிவை எடுத்தது. இது காங்கிரஸிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 22 எம்பிக்களைக் கொண்டுள்ள திமுக, தேசிய அளவில் பாஜகவுடன் ஒரு மென்மையான போக்கைக் கையாண்டு மத்திய அரசின் அழுத்தங்களில் இருந்து தற்காத்து கொண்டு வருகிறது...
கடந்த 4 மாதங்களாகவே மத்திய அரசுடன் திமுகவிற்கு எந்த பெரிய பிரச்சனையும் வராததே இதற்கு சாட்சி.. அதேசமயம், நாடாளுமன்றத்தில் 22 எம்பிக்களை வைத்துள்ள திமுகவை, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பாஜகவும் நினைக்கிறது.
திமுகவின் பலே பிளான்
ஒரே நேரத்தில் பாஜக மற்றும் தவெக ஆகிய 2 எதிரிகளையும் எதிர்த்துப் போராடுவதை தவிர்க்கவே திமுக விரும்புகிறது. இப்போதுள்ள சூழடிலில் விஜய்யின் தவெகவை முதன்மை எதிரியாக எதிர்கொள்ளத் தேவையான களத்தை அமைப்பதற்காக, பாஜகவிடம் ஒரு மென்மையான அணுகுமுறையைக் கையாள்வது தங்களுக்கு வசதியானது என திமுக கருதுகிறது.
இப்படி காங்கிரஸ் கொஞ்சமும் எதிர்பாராத வகையில், திமுக இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் ஒரு சாஃப்ட் பாலிடிக்ஸ் செய்யத் தொடங்கியதால், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது..
விஜய்க்கு 3 அட்வான்டேஜ்
அதேபோல பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தவெக - காங்கிரஸ் இடையே சலசலப்பு உள்ளது.. ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸார் சொல்கிறார்கள்.. ஆனால், தவெக தொண்டர்கள் "விஜய் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர்" என்கிறார்கள்.. இந்த பேச்சை நிறுத்த விஜய்யும் விரும்பவில்லை..
காரணம், இதன் மூலம் காங்கிரஸை கட்டுப்பாட்டில் வைப்பது + பாஜகவையும் சந்தோஷப்படுத்துவது + தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்து கொள்வது, இப்படி 3 வழிகளில் விஜய் பலனடைய பார்க்கிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
