ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்தலயா? அதிர்ந்த ராதிகா சரத்குமார்! திமுக மீது பாய்ச்சல்
சென்னை: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் போஸ்ட் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சர்ச்சை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சி பணியாற்ற அனுமதிக்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

யார் இவர்?: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவின் ரிப்ளை ஒன்று நெட்டிசன்கள் இடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. திமுகவில் உறுப்பினராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் பேசும் பல கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.
முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக கடுமையான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். பாஜகவை சேர்ந்த சில பெண் தலைவர்கள் பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தவறாக பேசிய நிலையில் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின் அவர் விளக்கம் கொடுத்து, மன்னிப்பு கேட்ட பின் சில நாட்கள் கழித்து கட்சியில் சேர்க்கப்பட்டார்.
மீண்டும் சர்ச்சை இந்த நிலையில்தான் இவர் சமீபத்தில் மீண்டும் மேடை ஒன்றில் மிகவும் ஆபாசமாக பேசினார். ஆளுநர் ஆர்என் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசினார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கருணாநிதியின் 100 நாள் பிறந்தநாள் விழா கூட்டத்தில்தான் அவர் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். முக்கியமாக பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை சொல்லி அவர் கடுமையாக பேசி இருந்தார்.

இழிவான பேச்சு: சென்னை எருக்கஞ்சேரியில் கடந்த ஜூன் 16ம் தேதி நடைபெற்ற கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் ரவி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து இழிவாக பேசியிருந்தார். இதில் அவர் கைதாகி விடுதலையும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில்தான் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத் குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை கூறி பேசி இருந்தார்.
இந்த நிலையில்தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் போஸ்ட் செய்துள்ளார்.
அதில், ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on திமுக என்று கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் டேக் செய்துள்ளார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications