திமுக வழக்கறிஞர் குறித்து திமுகவினரே கடும் விமர்சனம் .. அதற்கு அவர் தந்த பதிலடி
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாதம் தான் திமுகவில் சேர்ந்தார் அலிம் அல்புகாரி.. இவர் அண்மைக்காலத்தில் அடிக்கடி ஊடக விவாதங்களில் பங்கேற்கிறார். இவர் பங்கேற்ற ஊடக விவாதங்கள் சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது. இந்த சூழலில் திமுகவினர் சிலர் இவரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார்கள்.
திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் வழக்கறிஞர் அலிம் அல்புகாரி என்பவர் குறித்து வெளிட்ட எக்ஸ் தள பதிவில், "Most irritating person on debate shows these days. இருபது முப்பது வருசம் கட்சியில இருப்பவர்கள் கூட சும்மா இருக்கிறார்கள். கட்சியில சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகல, பேசுற பேச்சு தாங்க முடியல. அதுக்குள்ள கட்சி கொள்கை, கோட்பாடு, வரலாறு அது இது எல்லாத்தையும் கரைச்சு குடிச்சிட்டு dialy வாந்தி எடுத்துக்குட்டு இருக்காரு." என்று கடுமையாக கூறியிருந்தார்.

அதாவது "ஒரு அரசியல் கட்சியில் 20 அல்லது 30 வருடங்களாக இருக்கும் சீனியர் தலைவர்கள் அல்லது தொண்டர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், இந்த நபர் கட்சியில் இணைந்து இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. அதற்குள் அவர் பேசும் பேச்சுகளைக் கேட்கவே முடியவில்லை (தாங்க முடியவில்லை).அதற்குள்ளாகவே அந்தக் கட்சியின் ஒட்டுமொத்தக் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் அதன் நீண்ட கால வரலாற்றை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் போல (கரைத்துக் குடித்தது போல) காட்டிக்கொண்டு, தினமும் ஊடகங்களில் வந்து வாந்தி எடுக்கிறார் (அதாவது சலிப்பை ஏற்படுத்தும் விதமாகப் பேசுகிறார்). என்று கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் அலிம் அல்புகாரி, அங்கீகாரத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
ஒருத்தரோட கொள்கைப் பற்றுங்கிறது, அவர் வச்சிருக்க கட்சி கார்டோட தேதியை வச்சு வர்றது இல்ல... அவரோட ரத்தத்துல ஊறிப்போன தீவிரமான அர்ப்பணிப்புல இருக்குறது! வரலாறுங்கிறது இங்க யாருக்கும் பட்டா போட்டு எழுதிக் குடுக்கப்பட்ட சொந்த சொத்து கிடையாது; அதைத் தேடிப் படிக்கணும்னு நினைக்கிற எவருக்குமே அது பொதுவானதுதான்.
நான் அதிகாரப்பூர்வமா இந்தக் கட்சியில சேர்ந்து எத்தனை நாளாச்சுன்னு, நீங்க இன்னும் நாள் கணக்கு பாத்துட்டே இருக்கீங்க... ஆனா, நான் இதே கொள்கையோட என் வாழ்நாளை எத்தனை வருஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்! கையில இந்த மெம்பர்ஷிப் கார்டு வர்றதுக்கு ரொம்ப காலத்துக்கு முன்னாடியே, இந்தத் தத்துவங்களையும் கொள்கைகளையும் உள்வாங்கித்தான் நான் வளர்ந்தேன்.
கட்சியோட கொள்கையிலயோ, இல்ல அதோட வரலாற்றுலயோ என் புரிதல் தப்புன்னு நீங்க நினைச்சா... அதைத் தகுந்த ஆதாரங்களோடும் தரவுகளோடும் நிரூபிச்சு காட்டுங்க! அதைவிட்டுட்டு, நான் என்னைக்குக் கட்சியில சேர்ந்தேன்கிற தேதியை வச்சுப் பேசுறதுல எந்த ஒரு பயனும் இல்ல; அது அத்தனையுமே அர்த்தமற்றது" இவ்வாறு கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications