திமுகவின் லேடி சிவாஜி கிருஷ்ணமூர்த்தியா? சேலம் சுஜாதாவாம்.. இந்த கிழி கிழிக்குறாங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில ஆண்டுகளுக்கு திமுகவினரின் செயல்பாடுகளால் என எனக்கு தூக்கமே வரவில்லை என பேசி இருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர் பொன்முடி வரிசையில் தற்போது ஒரு பெண் பேச்சாளர் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி இருக்கிறார். சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் பேசியது சேலம் சுஜாதா என்ற பெண் பேச்சாளராம்..

2021 தேர்தலில் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி முதல்வரானார் திமுக தலைவர் ஸ்டாலின். அதற்குப் பிறகு நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர் என் உடம்பை பாருங்கள்.. இரவில் தூக்கமே வர மாட்டேங்குது.. விடிந்தால் நம்மவர்கள் என்ன பிரச்சனை செய்வார்களோ என யோசித்து யோசித்து எனக்கு தூக்கம் போய்விட்டது எனக்கு கூறி இருந்தார்.

DMK Salem Sujatha ponmudi

அதற்கு காரணமும் உண்டு.. திமுக ஆட்சி அமைந்த பிறகு சில அமைச்சர்கள், பேச்சாளர்களின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாசம் மிகுந்ததாகவும் இருந்தது.

திமுக அமைச்சர்கள்: தொண்டரை கல்லை விட்டு எறிந்த அமைச்சர் நாசர் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். அதற்குப் பிறகாக இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளும் பெண்களை ஓசி என அமைச்சர் பொன்முடி பேசியது, மனு கொடுக்க சென்ற பெண்ணின் தலையில் கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரன் அடித்தது என பல சர்ச்சைகள் கிளம்பியது.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி : அதற்கெல்லாம் மேலாக திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொது மேடைகளில் பெண்கள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசினார். நடிகைகள் ராதிகா, குஷ்பூ குறித்து பேசி சிறைக்குச் சென்றதெல்லாம் தனி கதை. அதற்குப் பிறகும் சில திமுக பேச்சாளர்கள் எல்லை மீறி பேசி தேசிய மகளிர் ஆணைய விசாரணை வரை சென்று வந்தார்கள். தொடர்ந்து கட்சியில் இருந்து அவர்கள் தற்காலிகமாக நீக்கப்படுவது, நிரந்தரமாக நீக்கப்படுவது, பிறகு மன்னிப்பு கேட்டார்கள் என கட்சியில் சேர்க்கப்படுவது என வாடிக்கையாகிவிட்டது.

பொன்முடி: இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி சைவ வைணவ பிரிவுகள் குறித்தும் பெண்கள் குறித்தும் ஆபாசமாக பேசியது திமுக கட்சி தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்திய.து ஒரு படி மேலே போய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி தூக்கி அடிக்கப்பட்டார். அதற்கு பிறகு அவர் மன்னிப்பு கேட்ட நிலையில் அவரை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.

சேலம் சுஜாதா: இது ஒரு புறம் இருக்க தற்போது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார் திமுகவைச் சேர்ந்த பெண் பேச்சாளர் ஒருவர். சேலம் சுஜாதா என்ற அவர் திமுக பேச்சாளராக இருக்கிறார். தமிழகம் முழுவதும் அவரை பேச வைத்து வருகின்றனர் திமுக நிர்வாகிகள். குறிப்பாக பெரம்பலூர், விழுப்புரம், சென்னை ஆகிய கட்சி மாவட்டங்களில் அடிக்கடி அவர் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆபாச பேச்சு: அதில் கலந்து கொண்டு பேசிய சேலம் சுஜாதா அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளில் எதிர்க்கட்சியினரை அர்ச்சனை செய்திருக்கிறார். குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பிரச்சார செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகிய குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசினார். இடையிடையே கெட்ட வார்த்தைகளையும் கலந்து விட அங்கிருந்த திமுகவினர் சிலர் கைதட்டினாலும் பலர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

கடும் விமர்சனம்: குறிப்பாக முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரது பேச்சை ரசிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் திணறிப் போய் அமர்ந்திருந்தனர். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவரது பேச்சு அடங்கிய யூடியூப் வீடியோக்கள் அதிகமாக வீயூவ்ஸ்களை அள்ளி வருகிறது. கீழே திமுக உடன் பிறப்புகள் இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என பாராட்டினாலும், பலர் ஒரு மேடையில் ஒரு பெண், அதுவும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் இப்படி எல்லாம் பேசலாமா என விமர்சித்து வருகின்றனர்.

திமுக: இது ஒருபுறம் இருக்க திமுகவில் ஏற்கனவே ஆபாச பேச்சாளர் என பெயர் பெற்ற கிருஷ்ணமூர்த்தியை இவர் தூக்கி சாப்பிட்டு விட்டார் எனவும், திமுகவின் லேடி கிருஷ்ணமூர்த்தி சேலம் சுஜாதா எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

திமுக சீனியர்: லேடி கிருஷ்ணமூர்த்தி என குறிப்பிட்டதால் அவர் நேற்றோ, இன்றோ களத்தில் இறக்கப்பட்டவர் நினைத்து விட வேண்டாம். திமுக உறுப்பினராக நீண்ட காலமாக இருக்கும் சேலம் சுஜாதா, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எல்லாம் சீனியர். கிருஷ்ணமூர்த்தி தீப்பொறி ஆறுமுகம் போல பேசி வருகிறார் என்றால் அவரைவிட பல மடங்கு பேசக்கூடியவர்களாம் சேலம் சுஜாதாவும், வண்ணை ஸ்டெல்லா என்ற பேச்சாளர்களும்.. திமுகவின் பெண் பேச்சாளர்களில் இருவரும் முக்கியமானவர்களாம்.. அவர்களின் பேச்சே இப்படித் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+