Election Exclusive: பேக்கரி டீலிங்..அதிமுக மாஜிகளுடன் திமுக சீனியர்ஸ் டீல்! மோப்பம் பிடித்த உளவு துறை! ரெடியான ஸ்டாலின்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தத் தேர்தலில் அமைச்சர்களின் செல்வாக்கை சோதிக்கும் வகையில் புதிய அரசியல் வியூகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளில் அல்லாமல், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் 'சிட்டிங்' அமைச்சர்களை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் திமுக கூட்டணி விரிவடைந்த நிலையில் பல கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இது தேர்தலில் மிகப் பெரிய பலனை திமுக கூட்டணிக்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தேர்தல் வியூகம்
மேலும் தேமுதிக இணைந்ததும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த கூட்டணி பலம் காரணமாக தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த சூழலில் திமுக தலைமை தேர்தல் வியூகங்களை மறுசீரமைத்து வருவதாக கூறப்படுகிறது. உளவுத்துறை வாயிலாக கிடைத்த தகவல்களில், சில அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் அரசியல் முடிவு
இதனால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சி வட்டார ஆலோசனைகளில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில், அமைச்சர்களின் செயல்திறனை நேரடியாக சோதிக்கும் வகையில் புதிய நடைமுறை பின்பற்ற முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போதைய அமைச்சர்கள் தங்கள் வழக்கமான தொகுதிகளை விட்டு விலகி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் பகுதிகளில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா
கடுமையான போட்டியை எதிர்கொண்டு வெற்றி பெறும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதே இந்த வியூகத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பின்பற்றிய தேர்தல் முறையை ஒத்த அணுகுமுறையாக இதை அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன. கடந்த காலத்தில் தொகுதி மாற்றம் மூலம் கடுமையான போட்டி நிலையை உருவாக்கிய அனுபவத்தை முன்வைத்து இந்த யோசனை பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சர்கள் தொகுதி மாற்றம்
தற்போதைய அரசியல் நிலவரத்தில் அமைச்சர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் சில பல கொண்டு களமிறங்கும் சூழல் உள்ளது. இந்த நிலையில் கடுமையான தேர்தல் போட்டி உருவாக்கப்படின், அமைச்சர்கள் தங்கள் வெற்றிக்காக அதிக முயற்சி எடுப்பார்கள் என திமுக தரப்பு கருதுகிறது. 2026 தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெறும் இலக்குடன் திமுக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கூட்டணி விரிவடைந்துள்ளதாலும், போட்டி அதிகரித்துள்ளதாலும், தேர்தல் வியூகங்களில் மாற்றம் அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
திமுக கூட்டணி அரசியல்
தற்போது கிடைத்துள்ள தகவல் படி துரைமுருகன், கே என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களை அங்கங்கே இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிமுக மாவட்ட செயலாளர்களை எதிர்த்து போட்டியிடும் சூழல் இருப்பதாகச் சொல்கின்றன. அவ்வாறு இல்லை எனில் அமைச்சர்களின் வாரிசுகள் அல்லது நேரடி ஆதரவாளர்களை போட்டியிட வைக்க வேண்டும் என திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம்.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்!












Click it and Unblock the Notifications