''அடிமைகளையும் -மதவாதிகளையும் விரட்டி அடித்த பெரியார் மண்''! ராஜீவ்காந்தி துவக்கிய வார்த்தைப்போர்!
அதிமுக, பாஜக, நாம் தமிழரை வார்த்தைகளால் வம்புக்கு இழுத்த ராஜீவ்காந்தி.
சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகத்தில் உள்ள நிலையில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பரபரப்பு டிவீட் ஒன்றை போட்டுள்ளார்.
அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை சீண்டும் விதமாக அவர் வெளியிட்டுள்ள பதிவு வார்த்தைப் போராக வெடித்துள்ளது.
ராஜீவ்காந்தியின் டிவிட்டர் பதிவுக்கு அதிமுகவினரும், பாஜகவினரும் பதிலேதும் கொடுக்காத நிலையில் நாம் தமிழர் கட்சியினர் சரமாரியாக விமர்சித்து பதில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

ராஜீவ்காந்தி டிவிட்
''பெரியார் மண்! அடிமைகளையும், மதவாதிகளையும், குடிதேஷ் கோமாளிகளையும், விரட்டி அடித்து வீழ்த்தி இருக்கிறது. தலைவர் முக ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் மாட்சிக்கு ஈரோடு சாட்சி'' என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதிமுகவை அடிமைகள் என்றும் பாஜகவை மதவாதிகள் என்றும் நாம் தமிழர் கட்சியினரை குடிதேஷ் கோமாளிகள் எனவும் ராஜீவ்காந்தி சூசகமாக குறிப்பிட்டிருப்பது வார்த்தைப் போராக வெடித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி
ராஜீவ்காந்தியின் பதிவுக்கு நாம் தமிழர் கட்சியினர் உடனடியாக எதிர்வினையாற்றத் தொடங்கினர். ராஜீவ்காந்தியை மனநோயாளி என்பன உள்ளிட்ட வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே அதிமுக, பாஜக தரப்பில் ராஜீவ்காந்தியின் டிவிட்டை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ்காந்தியை பொறுத்தவரை ஊடக விவாதங்களின் போதும், சமூக வலைதளப் பதிவுகளின் போதும் அதிமுகவை சாடுகிறாரோ இல்லையோ பாஜகவையும், நாம் தமிழர் கட்சியையும் சாட தவறாதவர்.

சீமான் கூறும் புகார்கள்
முதலமைச்சர் ஸ்டாலின் மீது சீமான் முன் வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் ராஜீவ்காந்தி மூலம் திமுக பதிலடிகள் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ராஜீவ்காந்தி ஒரு காலத்தில் சீமானுடன் மிக நெருங்கிய வட்டத்தில் இருந்தவர் என்பதும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் திமுகவில் இணைந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேச்சுத் திறன்
இவரது பேச்சுத்திறனால் திமுகவில் மாணவரணி தலைவர் பதவியை பெற்றுள்ள இவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி.சீட்டையும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் எப்போதும் ஆக்டிவாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பதில் ஆர்வமாக இருகிறார் ராஜீவ்காந்தி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications