அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு , பினராயி விஜயன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அண்ணா, கருணாநிதி நினைவிடம் சென்று சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினர்.
Dec 16, 2018, 7:43 pm IST
சோனியா காந்தி உரையுடன், கருணாநிதி சிலை திறப்பு விழா நிறைவு பெற்றது
Dec 16, 2018, 7:39 pm IST
எப்போதெல்லாம் தேசிய அரசியலில் பிரச்சினை வந்ததோ அப்போது கருணாநிதி ஆலோசனை கேட்பேன்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி அளித்த ஆதரவை மறைக்க மாட்டேன்
Dec 16, 2018, 7:37 pm IST
பெரியார், அண்ணா வழியில், கருணாநிதி சமூக நீதி போராளி- சோனியா காந்தி
முதல்வராக இருந்தபோது கருணாநிதி கொண்டு வந்த சீர் திருத்தங்கள் ஏராளம்
இட ஒதுக்கீடு, பிராமணரல்லாதோர் கோவில்களில் அர்ச்சகராக இருக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தார்
மாநில உரிமைகளுக்காக இறுதி வரை போராடிய மாபெரும் போராளி கருணாநிதி- சோனியா காந்தி
Dec 16, 2018, 7:33 pm IST
கருணாநிதி கையில் தமிழ் விளையாடியதை பார்த்து வியக்கிறேன்- சோனியா காந்தி
தமிழ் மீது தனியாக தாகம் கொண்டவர் கருணாநிதி
பல்லாயிரக்கணக்கான சிறு, குறு கதைகளை எழுதியவர் கருணாநிதி
7000 கடிதங்களை கருணாநிதி தனது உடன்பிறப்புகளுக்கு எழுதினார்-சோனியா காந்தி
Dec 16, 2018, 7:32 pm IST
கருணாநிதிக்கு தமிழ் மீது பெரிய ஆசை இருந்தது - சோனியா காந்தி
தமிழை வளர்க்க அவர் பெரிய பாடுபட்டார் - சோனியா காந்தி
அவர் அற்புதமான பேச்சாளர் - சோனியா காந்தி
அவரின் எழுத்திற்கு முன் எதுவும் சாத்தியமில்லை - சோனியா காந்தி
தமிழ் மீதான ஆசையால் அவர் பல படைப்புகளை இயற்றி இருக்கிறார் - சோனியா காந்தி
Dec 16, 2018, 7:31 pm IST
தமிழகத்தின் முதல்வராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி - சோனியா காந்தி
கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்து தமிழகத்தை மொத்தமாக மாற்றியவர் - சோனியா காந்தி
அவர் இதுவரை ஒருமுறை கூட தேர்தலில் தோற்றது இல்லை - சோனியா காந்தி
இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது - சோனியா காந்தி
Dec 16, 2018, 7:31 pm IST
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மகிழ்ச்சியடைகிறேன்- சோனியா காந்தி
கருணாநிதி பொது வாழ்க்கை தமிழகத்தின் வரலாறாக உள்ளது- சோனியா காந்தி
பினராயி விஜயன் எளிமையும், தூய்மையும் கொண்ட அரசியல் புரிபவர் - துரைமுருகன்
Dec 16, 2018, 6:17 pm IST
சென்னைக்கு வந்து போனாலே பதவி தானாக வரும் - ராகுலுக்கு துரைமுருகன் வாழ்த்து
Dec 16, 2018, 6:17 pm IST
நேரு குடும்பத்தோடு கோபாலபுரம் குடும்பம் மீண்டும் இணைந்திருக்கிறது - துரைமுருகன்
Dec 16, 2018, 6:17 pm IST
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தியை முதன் முதலில் அறிவித்தவர் கருணாநிதிதான் - துரைமுருகன்
பிரதமர் பதவியை வேண்டாம் என்று மறுத்த தியாக சொரூபி சோனியா காந்தி - துரைமுருகன்
தியாகத்தின் திருவுருவம் என்று சோனியா காந்தியை புகழ்ந்தவர் கருணாநிதி - துரைமுருகன்
Dec 16, 2018, 6:10 pm IST
சோனியா காந்தியின் பிள்ளையாக திகழ்கிறார் ஸ்டாலின்- துரைமுருகன்
பாஜக ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் சோனியா காந்தி - துரைமுருகன்
Dec 16, 2018, 6:03 pm IST
சூரியன் மறைவதில்லை என்ற புத்தகத்தை சோனியா வெளியிட்டார்
Dec 16, 2018, 6:03 pm IST
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக் கூட்டம் தொடங்கியது
சோனியா, ராகுல், ஸ்டாலின் ஆகியோருக்கு வெள்ளி வாள் பரிசாக அளிக்கப்பட்டது
Dec 16, 2018, 5:54 pm IST
கருணாநிதி சிலை திறப்பில் பங்கேற்றதை மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்- ரஜினிகாந்த்
Dec 16, 2018, 5:38 pm IST
சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்
Dec 16, 2018, 5:38 pm IST
கருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி
கருணாநிதி நினைவிடத்தைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி
Dec 16, 2018, 5:38 pm IST
கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி
அவர்களுடன் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்
Chennai: UPA chairperson Sonia Gandhi & Congress President Rahul Gandhi pay tribute to former Tamil Nadu Chief Minister M Karunanidhi at his memorial at Marina Beach after unveiling his statue at DMK headquarters. pic.twitter.com/BpXBBuMz5N
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறக்கப்படுகிறது
கருணாநிதி சிலையுடன் அண்ணா சிலையும் இன்று திறக்கப்படுகிறது
அகில இந்திய கட்சித் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொள்கிறார்
11:59 AM, 16 Dec
கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு
சிலை திறப்பு விழாவில் பல தேசிய கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்
முக்கியஸ்தர்கள் வர உள்ள நிலையில் சென்னையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது
1:35 PM, 16 Dec
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வருகை
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை
திமுக எம்.பி கனிமொழி முகுல் வாஸ்னிக்கை வரவேற்றார்
1:50 PM, 16 Dec
மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு செல்வதாக நான் கூறவில்லை - கமல்ஹாசன்
கஜா பாதித்த இடங்களை பார்வையிட ஏற்கனவே திட்டமிட்டு இருந்தேன் - கமல்ஹாசன்
அதனால் சிலை திறப்பு விழாவிற்கு செல்லவில்லை - கமல்ஹாசன்
கருணாநிதி மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது - கமல்ஹாசன்
அது எல்லோருக்கும் தெரியும் - கமல்ஹாசன்
அதை எல்லா முறையும் நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை - கமல்ஹாசன்
3:17 PM, 16 Dec
கருணாநிதி சிலை திறப்பு விழா : சென்னைவில் குவியும் திமுக தொண்டர்கள்
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதி சிலையை காண சென்னை வருகை
இன்று மாலை நடக்கும் திமுக விழாவில் கலந்து கொள்ள பலர் சென்னை வருகை
4:15 PM, 16 Dec
கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு தலைவர்கள் வருகை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா அறிவாலயம் வருகை
முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும் அறிவாலயம் வருகை
4:16 PM, 16 Dec
சோனியா காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வருகை
4:16 PM, 16 Dec
சென்னை வந்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சென்னை வந்தடைந்தார்
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் இருவரும் கலந்து கொள்கின்றனர்
சோனியா காந்தி கருணாநிதி சிலையை திறந்து வைக்க உள்ளார்
4:27 PM, 16 Dec
சோனியா காந்தி , ரகாகுல் காந்திக்கு காங்கிரஸார் உற்சாக வரவேற்பு
திமுக சார்பில் கனிமொழி வரவேற்றார்
காங். மூத்த தலைவர்கள் ப.சிதம்பம், நாராயணசாமி, தங்கபாலு உள்ளிட்டோர் வரவேற்றனர்
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று வரவேற்றார்
விமான நிலையத்திலிருந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சோனியா, ராகுல் பயணம்
ஓய்வுக்குப் பின்னர் அறிவாலயம் சென்று கருணாநிதி சிலையைத் திறந்து வைப்பார் சோனியா
4:40 PM, 16 Dec
சினிமா நட்சத்திரங்கள் குவிந்தனர்.. கருணாநிதி சிலை திறப்பு விழா
ரஜினிகாந்த், வடிவேலு, நாசர், பிரபு உள்ளிட்டோர் வருகை
இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவும் விழாவுக்கு வருகை
4:44 PM, 16 Dec
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வந்தார்
4:49 PM, 16 Dec
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளா முதல்வர் பினராயி வருகை
5:05 PM, 16 Dec
அண்ணா அறிவாலயம் புறப்பட்டனர் சோனியா காந்தி, ராகுல் காந்தி
கருணாநிதி சிலையை இன்னும் சற்று நேரத்தில் திறந்து வைக்க உள்ளனர்
அதன்பின் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்
5:06 PM, 16 Dec
ஓய்வை முடித்துக் கொண்டு அறிவாலயம் புறப்பட்டார் சோனியா காந்தி
சோனியாவும், ராகுல் காந்தியும் இணைந்து அறிவாலயம் வருகின்றனர்
அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைப்பார்
5:20 PM, 16 Dec
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா காந்தி
5:21 PM, 16 Dec
செம்மொழியான தமிழ்மொழி பாடல் ஒலிக்க சிலை திறக்கப்பட்டது
5:25 PM, 16 Dec
திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சிலை திறக்கப்பட்டது
சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன்
நாராயணசாமி, ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்
5:28 PM, 16 Dec
மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சோனியா, ராகுல் செல்கிறார்கள்
5:35 PM, 16 Dec
கருணாநிதி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி
5:38 PM, 16 Dec
கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி
அவர்களுடன் திமுக, காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்
Chennai: UPA chairperson Sonia Gandhi & Congress President Rahul Gandhi pay tribute to former Tamil Nadu Chief Minister M Karunanidhi at his memorial at Marina Beach after unveiling his statue at DMK headquarters. pic.twitter.com/BpXBBuMz5N