ஆளும் கட்சியுடன் அண்டர்டேபிள் டீலிங்? இன்ஷியல் ‘லு’ மாஜிக்கு சிக்கல்! ஸ்கெட்ச் போட்ட அறிவாலயம்! பரபர
சென்னை: பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. திமுக தவெக இடையே காரசார விவாதங்களுக்கும் பஞ்சமில்லை. இது ஒரு புறம் இருக்க சில முன்னாள் அமைச்சர்கள் தவெக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள் என்ற புகார் அறிவாலயத்துக்கு பறந்திருக்கிறது. குறிப்பாக 'இன்சியல் லு' அமைச்சர் அடிக்கடி திமுக முன்னாள் அமைச்சர்களையே பேசவிடாமல் தவெகவுக்கு ஆதரவாக பேசுகிறாரோ என்ற சந்தேகம் திமுக தலைமைக்கு வந்திருப்பதாக சொல்கின்றார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. சட்டசபையில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் ஆளும் தரப்பு மீது எதிர்க்கட்சியான திமுக காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

அதே நேரத்தில் சில முன்னாள் அமைச்சர்கள் அமைதி காத்து வருகின்றனர், கடந்த ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியினரை கூட பேச விடாமல் பதிலடி கொடுத்த அமைச்சர்கள் பலர் தற்போது சட்டசபையில் இல்லை. அதே நேரத்தில் இருக்கும் பலரும் அமைதி காத்து வருவது திமுக தலைமையை அதிர வைத்துள்ளதாம்.
'இனிஷியல் லு'
குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்கு பிறகு 'இனிஷியல் லு' அமைச்சர் தவெகவை விமர்சிப்பதை விட காமெடியாக பேசி அவர்களுக்கு முட்டுக் கொடுப்பது போல் செயல்படுகிறார் என்ற சந்தேகம் அறிவால தரப்புக்கு வந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, மருத்துவமனை அட்மிஷன் என பரபரப்பாக இருந்த அவர் தற்போது சற்று அடக்கி வாசிக்கிறாரோ என்ற சந்தேகம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல்
தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் சிலர் பேசும்போது ஏதாவது தவறாக பேசினால் மற்ற அமைச்சர்கள் காப்பாற்ற முயலும் நிலையில் திமுக தரப்பிலிருந்து 'இன்சியல் லு' மாஜி அவர்களை காப்பாற்றி வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. குறிப்பாக பட்ஜெட் பொது விவாதத்தின் போது நிதி அமைச்சர் மரிய வில்சன் தமிழ் குறித்து பேசியது சர்ச்சையானது.
திமுக
மேலும் நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன் அப்படித்தான் பேசுவேன். எங்களது மதம் அப்படித்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது என பேசியதை திமுகவினர் கடுமையாக விமர்சித்தனர். இதை வைத்து சட்டமன்றத்தை மட்டும் அல்ல.. தமிழ்நாடு அரசியலையே ஒரு கை பார்த்து விடலாம் என திமுக இணைய உடன்பிறப்புகள் திட்டமிட்டு இருந்தனர்.
தவெக அமைச்சர்கள்
ஆனால் அதற்கு சப்போர்ட் செய்வது போல பேசிய 'இன்ஷியல் லு' அமைச்சர்," அவர் அப்படித்தான் பேசுவார்.. அவரை எனக்கு நன்றாக தெரியும்" என பேசி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே லாட்டரி பணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டபோது அந்த 'இன்ஷியல் லு' அமைச்சர் எழுந்து வேறு விவகாரத்தை பேசி திசை திருப்பி விஷயத்தை மழுங்கடித்தார்.
அறிவாலயம் ஷாக்
ஆனால் சிறிது நேரத்திலேயே மூத்த முன்னால் அமைச்சரான கேஎன் நேரு எழுந்து அப்பாவை காணோம் என சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். கட்சியில் சமீபத்தில் சேர்ந்த அதுவும் முன்னாள் அதிமுக முதலமைச்ச்சரான ஓபிஎஸ் கூட திமுகவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் 'இனிஷியல் லு' அமைச்சர் சட்டமன்ற நடவடிக்கைகளில் தவெக அரசுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு உறுதியாகி இருக்கும் நிலையில், மற்ற மூத்த தலைவர்களிடம் ஏன் அவர் இப்படி பேசுகிறார்? என விசாரியுங்கள் என சொல்லி இருக்கிறதாம் அறிவாலய தரப்பு.


Click it and Unblock the Notifications
