Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026 டார்கெட் 200.. இறங்கியடிக்கும் திமுக! கிட்டவே நெருங்க முடியாது.. பாஜகவின் ப்ளான் - பி இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற திமுகவின் தலைமை நிலைய புள்ளிகள் தொடங்கி, பூத் லெவல் ஏஜென்ட்கள் வரை மிகத் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் பணிகளுக்கு ஈடு கொடுக்க முடியாத பாஜக,விசாரணை அமைப்புகள் மூலம் அவர்களை முடக்க திட்டமிட்டு இருப்பதாக புகார் சொல்கின்றனர் திமுகவினர்.

வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக , தன்னுடைய தேர்தல் தயாரிப்புகளை மண்டல அளவிலும், தொகுதி அளவிலும் வேகமாக முன்னெடுத்து வருகிறது. மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை நியமித்து களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபக்கம் மாவட்ட வாரியாக அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாக்களில் பங்கேற்று வருகிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, தொடங்கிய திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வது போன்ற அரசு பணிகளோடு சேர்த்து, கட்சி மட்டத்திலும் செயல்பாடுகளை வலுப்படுத்தி வருகிறார்.

mk stalin DMK BJP

2026 சட்டமன்ற தேர்தல்

அதேசமயம், திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், மாவட்ட வாரியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, நிர்வாகிகள் மற்றும் பணி செய்பவர்களை தேர்தல் சூழலுக்கு தயார் செய்து வருகிறார். சமீபத்தில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பெரிய அளவில் நிர்வாகிகள் பங்கேற்றது கட்சியின் ஒழுங்கமைப்பு வலுவாக இருப்பதை காட்டியது. இதற்கு இணையாக திமுக மகளிரணியும் மண்டல மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டு வருகிறது.

திமுக இலக்கு

முதல் மாநாடு திருப்பூரில் நடத்தப்பட உள்ளது. இதனால், தேர்தலை எதிர்கொள்ள திமுக பல்வேறு அணி மற்றும் பிரிவுகளை செயல்பாட்டில் ஈடுபடுத்தி வருகிறது. இந்த நிலையில், திமுக முக்கிய தலைவர்களை குறிவைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்ற அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாஜக திட்டம்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் பட்டியல் கையில் உள்ளது. யார் உள்ள போகிறார்கள், யார் வெளியே போகிறார்கள் என்பதை விரைவில் தெரிந்துகொள்ளலாம். டெல்லியைப் போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு வருட காலமாக சிறையில் இருந்து நிலையில், நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகே வெளியே வந்தார். மேலும் அமைச்சர் நேரு குடும்பத்தை சுற்றி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பாஜக பிளான் பி

அதேபோல் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தொடர்பான சோதனைகளும் நடைபெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கிலும் நடந்துவரும் நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக பேசப்படும் விஷயங்களாக மாறியுள்ளன. மேலும், சில திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் உள்ளிட்ட விசாரணைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணைகள் தேர்தல் காலத்தை நெருங்கும் போது தீவிரப்படுத்தப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

திமுக தேர்தல்

இந்த அரசியல் சூழ்நிலையை திமுக தலைமை உணர்ந்துள்ளதாகவே கருதப்படுகிறது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின், கட்சியினரிடம் "நேரடியான அரசியல் போட்டியில் எதிரிகளை வெல்ல முடியாதவர்கள், வேறு வழிகளில் சங்கடப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். கட்சி பணிகளில் முழு உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளார். மொத்தத்தில், ஒரு பக்கம் திமுக தேர்தல் தயாரிப்புகளை வலுப்படுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பாஜக விசாரணை அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சி செய்கிறதாக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாகப் பேசப்படுகிறது. கிளைமேக்ஸ் எந்த யுக்தி ஜெயித்தது என்பதை தேர்தல் முடிவுகள் தான் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+