இவ்வளவுதான் சீட்..ஸ்டாலின் டேபிளில் ரெடியான லிஸ்ட்! இந்த முறை மாஸாக யோசித்த அறிவாலயம்! ஸ்பெசல் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை இலக்காக வைத்து திமுக களம் இறங்குகிறது. இந்த நிலையில் கடந்த 2021 தேர்தலைப் போலவே இந்த ஆண்டும் கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கடந்த முறை கூட்டணி கட்சிகள் தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை திமுகவே இறங்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது திமுக தரப்பில் ஒரு உத்தேச பட்டியல் விவாதிக்கப்பட்டு வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வேளையை துவக்கி விட்டது என சொல்லலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் குழு ஆரம்பிக்கப்பட்டு கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் 200 தொகுதிகள் என டார்கெட்டை ஃபிக்ஸ் செய்துள்ளதால் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

mk stalin DMK Alliance

2026 தேர்தல்

ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் வெற்றியை தக்க வைப்பதோடு, வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் திமுகவினர் எண்ணமாக இருக்கிறது. இதற்காக சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன ஸ்டாலின். அது மட்டும் அல்லாமல் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் சீனியர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், முன்னால் எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது உள்ளூர் நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்களை திமுகவில் இணைய வைக்க வேண்டும் என்ற உத்தரவும் போடப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல்

அதை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அதிமுகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதற்கு பலரும் கிடைத்திருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் அதிமுகவின் முக்கிய புள்ளிகளான மைத்ரேயன், அன்வர் ராஜா, மருது அழகுராஜ், முன்னாள் எம்எல்ஏ சின்னச்சாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்திருக்கின்றனர். இதுமட்டும் இல்லாமல் கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி திமுகவில் இணையும் படலமும் தொடங்கி வருகிறது.

மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் என்ற இலக்கை எட்டுவதற்கு திமுக பல திட்டங்களை முன்வைத்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கடந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை திமுகவை போட்டியிட திட்டமிட்டுள்ளது. மேலும் 170 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் இறங்குகிறது. தற்போதைய முதற்கட்ட தகவல்களின்படி காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனவும் என சொல்லப்படுகிறது.

தொகுதி ஒதுக்கீடு

கடந்த ஆண்டு போலவே விடுதலை சிறுத்தைகள், மதிமுகவுக்கு ஏழு சட்டமன்றத் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஐந்து தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மஜக, ,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகளும், தனியரசு ,தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சேர்ந்தால் அவர்களுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதை வைத்தே திமுக அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+