அதிரடி.. "அவரை தோற்கடிங்க.. அந்த பதவி தர்றோம்".. தங்கத்துக்கு திமுக தந்த அசைன்மென்ட்.. பரபர போடி!
ஓபிஎஸ்ஸை எதிர்த்து போடியில் களம் காணுகிறார் தங்க தமிழ்செல்வன்
சென்னை: எதிர்பார்த்தது போலவே இந்த முறையும் திமுகவின் தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ்ஸை எதிர்த்து போடியில் களம் காணுகிறார்.. இதையொட்டி பெருத்த எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டு வருகிறது.
கடந்த எம்பி தேர்தலின்போதே, ஓபிஎஸ் மகனைத் தோற்கடிக்க பலவாறாக முயற்சி மேற்கொண்டார் தமிழ்செல்வன்.. அப்போதே தெரு தெருவாக ஓபிஎஸ் பணத்தை வாரி இறைத்து கொண்டுள்ளார் என்று தங்க தமிழ்செல்வன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. ஆனாலும் மண்ணை கவ்விவிட்டார்.
தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் கோட்டைதான்.. திமுக இங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றதே கிடையாது..!!

தேனி
அதிமுக இரண்டாக உடைந்தபோதுகூட, அமமுக செல்வாக்குடன் இருப்பதற்கு காரணமும் இதுதான்.. மற்றொரு பக்கம் சாதீய வாக்குகள் இரு கட்சிகளுக்குமே கை கொடுத்து வருகிறது. அதனால்தான் திமுகவில், தங்கதமிழ்செல்வன் தாவியபோதுகூட, தன்னுடைய ஆதரவாளர்களை அப்படியே திமுக பக்கம் இழுத்து செல்வார் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், ஓபிஎஸ் செல்வாக்கை இப்போது வரை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை என்பதே உண்மை..

அசைன்மென்ட்
இப்போதுகூட திமுக சார்பில் ஒரு அசைன்மென்ட் தரப்பட்டது. அதில், முக்கிய தொகுதிகளுக்கு குறி வைக்கப்பட்டது.. அதிலும் அதிமுக அமைச்சர்கள் உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனத்தை திமுக செலுத்தியது.. அந்தந்த அமைச்சர்களுக்கு குறி வைத்ததுடன், அவர்களை இந்த முறை தோற்கடிக்கும் வியூகத்தையும் பலமாக வகுத்து வந்தது.

தகவல்கள்
அப்போதுதான், தங்க தமிழ்செல்வனுக்கு வாய்ப்பு தரப்படும் என்றும் தகவல்கள் வந்தன.. அதுமட்டுமல்ல, ஒருவேளை ஓபிஎஸ்ஸை நேருக்கு நேர் நின்று தோற்கடித்தால், நிச்சயம் அமைச்சர் பதவி தரப்படும் என்றும் ஒரு வாக்குறுதி தரப்பட்டதாக செய்திகள் கசிந்தன. அந்த வகையில், தங்க தமிழ்செல்வனுக்கு இன்று போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது திமுக.. சமுதாய ஓட்டு, ஆதரவாளர்கள் ஓட்டு, அதிமுகவின் அதிருப்தி ஓட்டு, போன்றவைகள்தான் திமுகவுக்கு கை கொடுக்கும் என்று தெரிகிறது..

சாலை வசதி
இது எல்லாவற்றிற்கும் மேலாக, இங்குள்ள பல கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை.. போடி- மதுரை இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டு தற்போது அது நிறைவடையும் நிலையில் இருந்தாலும் ரெயில் சேவை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராதது, மலை கிராம மக்களின் அடிப்படை வசதிகள் போன்றவை இன்னும் நிறைவேற்றப்படாத திட்டங்களாக இப்பகுதி மக்கள் சொல்கின்றன.

பிரச்சாரம்
ஒருவேளை இதையெல்லாம் முன்வைத்து திமுக ஆட்சியில் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழியுடன் தங்கதமிழ்செல்வன் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.. அதுமட்டுமல்ல, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு சம்பந்தமான தென்மாவட்டங்களில் அதிருப்தி உள்ள நிலையில், இது ஓபிஎஸ்க்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.. எனினும், ஓபிஎஸ் தன் இரு மகன்களுடன் வலுவாக அங்கு உள்ள நிலையில், தங்கம் ஜெயிப்பரா? அமைச்சர் பதவியை பெறுவாரா? பார்ப்போம்..!
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications