39 இடங்களையும் கைப்பற்றும் திமுக.. கிளீன் ஸ்வீப் செய்யும் ஸ்டாலின்.. அதிமுக, பாஜக ஜீரோ.. ஏபிபி சர்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு தேச மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை திமுக அமைத்து உள்ளது. இந்த கூட்டணி 39 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

DMK to clean sweep in Tamil Nadu in Lok sabha election 2019 says ABP C Voter survey

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

திமுக கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1
கொமதேக - 1

இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டு உள்ளது. 2019ல் பெற்றதை விட திமுக கூட்டணி 1 இடம் கூடுதலாக பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

வாக்கெடுப்புத் தரவுகள், வாக்குப் பங்கின் அடிப்படையில், 54.7% சதவீதத்துடன், திமுக மீண்டும் தமிழ்நாட்டில் முதலிடம் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாறாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 27.8% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடம் 10.9% வாக்குகளுடன் NDA க்கு லாபமாக இருக்கும், மற்ற கட்சிகள் 6.8% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்: அதேபோல் வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டு உள்ளது..

ராஜஸ்தானில் பாஜக தனது ஆதிக்கத்தைத் தொடர உள்ளது. அதன்படி அனைத்து 25 இடங்களையும் கைப்பற்ற உள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான UPA அங்கே ஒரு இடம் கூட பெறாமல் தோல்வி அடையும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டு உள்ளது..

CVoters உடன் இணைந்து ABP News நடத்திய கருத்துக்கணிப்பில் ஜம்மு காஷ்மீரில்கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. 5ல் இந்தியா கூட்டணிக்கு மூன்று லோக்சபா இடங்களும் பாஜகவிற்கு இரண்டு லோக்சபா தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+