15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை!
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் திமுக 15 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மீதமுள்ள ஒரு தொகுதி கூட்டணியான காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

28 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பொன்முடி, காந்தி ஆகியோர் தங்களுக்கு சீட் வேண்டாம் என சொன்னதால் அவர்களது மகன்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அது போல் சில சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. வேளச்சேரி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
- ஆர்.கே.நகர்- ஜே.ஜே.எபினேசர்
- பெரம்பூர்- ஆர்.டி.சேகர்
- கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்
- வில்லிவாக்கம்- கார்த்திக் மோகன்
- திரு.வி.க.நகர் (தனி)- கே.எஸ்.ரவிச்சந்திரன்
- எழும்பூர் (தனி)- தமிழன் பிரசன்னா
- ராயபுரம்- டாக்டர் சுபேர்கான்
- துறைமுகம்- பி.கே.சேகர்பாபு
- சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்
- ஆயிரம் விளக்கு- டாக்டர் எழிலன்
- அண்ணா நகர்- சிற்றரசு
- விருகம்பாக்கம்- பிரபாகர் ராஜா
- சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்
- தியாகராயநகர்- ராஜா அன்பழகன்
- மயிலாப்பூர்- தா.வேலு
சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என சத்யராஜ் மகள் திவ்யாவும், டிகேஎஸ் இளங்கோவன் மகள் மாதவியும் விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.
கடந்த முறை 16 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளே வென்றன. இந்த முறை சென்னையில் ஒரு தொகுதியை மார்க்சிஸ்ட் கேட்டு கிடைக்கவில்லை. தற்போதும் 16 தொகுதிகளையும் திமுக கூட்டணியே அள்ளுமா என்பதை பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications