தூத்துக்குடி டூ சென்னை வரை! லோக்சபா தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்! முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது தெரியுமா?

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, உள்ளிட்ட கட்சிகளின் தொகுதிகள் இன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் திமுக எந்தெந்த தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

DMK to Contest in 21 Lok Sabha Constituencies for 2024 Elections Here s the Complete List

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குமக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன. இவற்றில் மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்த தொகுதியும் கொடுக்கப்படவில்லை. ஆயினும் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம் என கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திமுக, தன்னுடைய கூட்டணி கட்சிக்கு 19 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகளுக்கு 20 இடங்களை ஒதுக்கிய நிலையில் இந்த முறை ஒரு இடம் குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது.

திமுக கூட்டணியில் கட்சி வாரியாக தொகுதிகள்:

திமுக- 21
காங்கிரஸ்- 10
விசிக- 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- 2
மதிமுக-1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 1
மக்கள் நீதி மய்யம்- 1 மாநிலங்களவை சீட்

திமுக கூட்டணியில் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - ராமநாதபுரம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்
கம்யூனிஸ்ட் கட்சி- நாகை, திருப்பூர்
மார்க்சிஸ்ட் கட்சி- மதுரை, திண்டுக்கல்
விடுதலை சிறுத்தைகள் கட்சி- சிதம்பரம், விழுப்புரம் ஆகியவை ஆகும்.

DMK to Contest in 21 Lok Sabha Constituencies for 2024 Elections Here s the Complete List

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் யாவை:

1. திருவள்ளூர் (தனி)
2. கிருஷ்ணகிரி
3. சிவகங்கை
4. விருதுநகர்
5. கரூர்
6. கடலூர்
7. நெல்லை
8. மயிலாடுதுறை
9. கன்னியாகுமரி
10. புதுவை

மதிமுக போட்டியிடும் தொகுதி:

திருச்சிராப்பள்ளி

அது போல் திமுக போட்டியிடும் தொகுதிகள் யாவை:

1. சேலம்
2. தருமபுரி
3. கோவை
4. பொள்ளாச்சி
5. நீலகிரி
6. ஈரோடு
7. பெரம்பலூர்
8. தஞ்சை
9. தென்காசி
10. தூத்துக்குடி
11. வடசென்னை
12. மத்திய சென்னை
13. தென் சென்னை
14. ஸ்ரீபெரும்புதூர்
15. காஞ்சிபுரம்
16. வேலூர்
17. அரக்கோணம்
18. திருவண்ணாமலை
19. கள்ளக்குறிச்சி
20. ஆரணி
21. தேனி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+