போன முறையை விட.. அதிக வாக்கு சதவிகிதம் வாங்க போகுது.. அதிமுக, பாஜகவை மிரள வைக்கும் திமுக.. சர்வே
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் திமுக 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை கைப்பற்றும், கடந்த முறை இருந்த வாக்குகளை திமுக இந்த முறையும் தக்க வைக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு தேச மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை திமுக அமைத்து உள்ளது. இந்த கூட்டணி 39 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
2019ல் பெற்றதை விட திமுக கூட்டணி 1 இடம் கூடுதலாக பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
வாக்கெடுப்புத் தரவுகள், வாக்குப் பங்கின் அடிப்படையில், 54.7% சதவீதத்துடன், திமுக மீண்டும் தமிழ்நாட்டில் முதலிடம் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாறாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 27.8% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடம் 10.9% வாக்குகளுடன் NDA க்கு லாபமாக இருக்கும், மற்ற கட்சிகள் 6.8% வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019 தேர்தல் வாக்கு சதவிகிதம்: முக்கியமாக தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் திமுக 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை கைப்பற்றும், கடந்த முறை இருந்த வாக்குகளை திமுக இந்த முறையும் தக்க வைக்கும் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது.
2019 தேர்தல் வாக்கு சதவிகிதம் திமுக கூட்டணி 53.15%
திமுக 33.52%
காங்கிரஸ் 12.61%
அதிமுக கூட்டணி 30.57%
அதிமுக 19.39%
பாஜக 3.66%
பாமக 5.36%
தேமுதிக 2.16%
நாம் தமிழர் கட்சி 3.90%
அதுவே இந்த முறை வாக்குப் பங்கின் அடிப்படையில், 54.7% சதவீதத்துடன், திமுக மீண்டும் தமிழ்நாட்டில் முதலிடம் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக இரண்டாம் இடமா?: தமிழ்நாட்டில் பாஜக வாக்கு சதவிகித அடிப்படையில் இரண்டாம் இடம் பிடிக்கும் என்று பல கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் இந்த கணிப்பில் அதிமுகதான் இரண்டாம் இடம் பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. பாஜக 11 சதவிகிதம் கூட வாக்கு சதவிகிதம் எடுக்காது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
கூட்டணி: திமுக கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1
கொமதேக - 1
இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
குஜராத்: அதேபோல் வரும் மக்களவைத் தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டு உள்ளது..
ராஜஸ்தானில் பாஜக தனது ஆதிக்கத்தைத் தொடர உள்ளது. அதன்படி அனைத்து 25 இடங்களையும் கைப்பற்ற உள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான UPA அங்கே ஒரு இடம் கூட பெறாமல் தோல்வி அடையும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என கணிக்கப்பட்டு உள்ளது..
CVoters உடன் இணைந்து ABP News நடத்திய கருத்துக்கணிப்பில் ஜம்மு காஷ்மீரில்கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. 5ல் இந்தியா கூட்டணிக்கு மூன்று லோக்சபா இடங்களும் பாஜகவிற்கு இரண்டு லோக்சபா தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications