பரம ரகசியம்.. தி.நகர் ஹோட்டலில் கூடும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. நவ.26 பேசப்போவது என்ன?
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சியினர் ஆரம்பித்து விட்டனர். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 26ஆம் தேதி சென்னை தி. நகர் ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
லோக்சபா தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யும் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் பணிகளை செய்ய சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினரும் மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது பூத் கமிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பொதுச்செயலாளர் துரைமுருகன். வரும் 26ஆம் தேதி தி. நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகராய நகர் ஹோட்டல் அகார்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் குறித்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதால் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications