சாட்டையை விளாசும் ஸ்டாலின்! ஒரே நாளில் 4 முக்கிய ஆக்சன்.. வீடியோவில் வந்த திமுக மாவட்டச் செயலாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர்களை எங்கே களமிறக்குவது என்பது தொடர்பான ஆலோசனைகளை திமுக மேற்கொண்டு வருகிறதாம். ஆளும் திமுக தற்போது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் உள்ளது.

DMK to hold its District Secretaries meeting with DMK leaders: What will be discussed today?

இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. இவர்கள் ஒன்றாக சேர்ந்து பாஜகவை வீழ்த்த தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள். பாஜகவிற்கு எதிரான பிரம்மாண்டமான கூட்டணியாக இந்த லோக்சபா தேர்தல் கூட்டணியாக இந்தியா கூட்டணி பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி உருவாகவும், அதில் பல கட்சிகள் இணையவும் முக்கிய காரணமாக இருந்ததில் திமுகவும் ஒன்று.

திமுக கட்சியின் நேரடி முன்னெடுப்பும்.. காங்கிரஸ் கட்சிக்கு திமுக பாலமாக இருந்ததும் கூட இந்த கூட்டணி உருவாக பெரிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில்தான் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பான முக்கியமான நடவடிக்கைகளை இந்த கூட்டத்தில் எடுக்க திமுக முடிவு செய்துள்ளதாம். இந்த கூட்டத்தில் பின்வரும் 3 விஷயங்கள் ஆலோசனை செய்யப்படலாம் என்று ஆளும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

DMK to hold its District Secretaries meeting with DMK leaders: What will be discussed today?

1 அதன்படி லோக்சபா தேர்தலில் பணிகளை எப்படி செய்வது, பணிகளை உடனே தொடங்குவது தொடர்பான ஆலோசனை.

2 பூத் கமிட்டியை புதுப்பிப்பது , புதிய ஆட்களை எடுப்பது, இப்போதே மாவட்ட வாரியாக பணிகளை தொடங்குவது.

3 மாவட்ட அளவில் உள்ளூர் தேர்தல் சர்வே பணிகளை செய்வது. எம்பிக்கள் பலம் என்ன.. என்பது தொடர்பாக ஆலோசனைகளை செய்வது.

4 களப்பணிகளை., உள்ளூர் அளவில் கூட்டங்களை நடத்துவது, உள்ளூர் அளவில் பிரச்சனைகளை சரி செய்வது போன்ற பணிகளை செய்வது முக்கியம் ஆகும்.

ஸ்டாலின் முக்கிய மூவ்: இந்த லோக்சபா தேர்தலுக்கான ஆளும் திமுக முக்கியமான சில மூவ்களை மேற்கொண்டு வருகிறதாம். அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை இந்த முறை திமுக கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

1. இந்த முறை திமுக அதிக இடங்களில் போட்டியிடும். லோக்சபா தேர்தலில் ஆளும் திமுகவிற்கு அதிகமான இடங்களை எடுத்துக்கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை திமுக கொடுக்கும்.

2. கூட்டணி கட்சிகள் கடந்த முறை போட்டியிட்டதில் பாதிக்கு பாதி இடங்களில் இந்த முறை போட்டியிடும்.

3. கூடுதலாக மக்கள் நீதி மையம் கட்சி இந்த முறை திமுக கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் உள்ளன.

இதை பற்றியும் இன்று நடக்கும் கூட்டங்களில் ஆலோசனை செய்யப்படும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+