திமுக எம்.பிக்கள் உடனே சென்னை வர ஸ்டாலின் அழைப்பு.. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் ஆலோசனை
சென்னை: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார். இந்த குளிர்கால கூட்டத்தொடர் லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நடக்கும் மூன்றாவது கூட்டத்தொடர். அரசு எந்தெந்த மசோதாக்களை அறிமுகப்படுத்தும், எதை எதை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை முன்வைக்கக்கூடும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நவம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டத்தில், நவ.25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications