திமுகவில் விருப்பமனு விநியோகம்.. பிப்ரவரி 20ம் தேதி முதல் வாங்கலாம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் பிப்ரவரி 20ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு பெறலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் விருப்ப மனுவுக்கான கட்டணமும் தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக தனது 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.

மண்டலம் வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக தீவிரம்
அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது. அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் பிப்ரவரி 22ம் தேதி முதல் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர்.
பிப்.,22 முதல் விருப்ப மனு
இந்நிலையில் தான், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛நடைபெறவிருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டசபை பொதுத்தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 20-2-2026 வெள்ளிக்கிழமை முதல் 2-3-2026 திங்கட்கிழமை வரை தலைமைகழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுகிறேன்.
கட்டணம் எவ்வளவு?
தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டசபை தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம் தனித்தனியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொது தொகுதி என்றால் ரூ.25 ஆயிரம், மகளிர்க்கும் மற்றும் தனித்தொகுதிக்கும் என்றால் ரூ.15,000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளராக போட்டியிட விண்ணப்பித்தவர்கள் கூட்டணியின் தோழமை கட்சிகளுக்கென பகிர்ந்து கொள்ளப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருப்பின் அவர்களது விண்ணப்ப கட்டணம் பின்னர் திருப்பி தரப்படும். விண்ணப்ப படிவம் தலைமை கழகத்தில் ரூ.1000 வீதம் செலுத்தி பெற்று கொள்ளலாம்'' என்று கூறியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications