திமுக கூட்டணிக்கு 30 இடங்கள்.. மலரும் தாமரை.. 5 இடங்களை தூக்கும் பாஜக கூட்டணி.. நியூஸ் 18 கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் திமுக 30 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பாஜக கூட்டணி 5 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக கூட்டணி 4 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணிக்கு 51 வாக்கு சதவிகிதம் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 13 சதவிகித வாக்குகள் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 17 சதவிகிதம் கிடைக்கும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), விசிக, ம.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு தேச மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை திமுக அமைத்து உள்ளது. இந்த கூட்டணி 30 தொகுதிகளையும் மொத்தமாக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
திமுக கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.
திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1
கொமதேக - 1
அதிமுக, பாஜக கூட்டணிகள் இன்னும் முடிவாகாத நிலையில், அதிமுக கூட்டணி 4 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணிக்கு 51 வாக்கு சதவிகிதம் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 13 சதவிகித வாக்குகள் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 17 சதவிகிதம் கிடைக்கும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாஜக அதிக இடங்களில் ஜெயித்தாலும் அவர்களின் வாக்கு சதவிகிதம் குறைவு என்று கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுகதான் இரண்டாவது பெரிய கட்சியாக நீடிக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மற்ற கணிப்புகள்; 2024 மக்களவைத் தேர்தலில் பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக 28 இடங்களைப் பெறும், இந்தியா கூட்டணிக்கு 1 இடம் கிடைக்கும்.
அதன்படி பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பிரதமர் மோடிக்காகவே பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று நியூஸ் 18 சிஎன்என் சர்வே முடிவுகள் தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு வாக்களிப்போம் என 85 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர் 518 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21 மாநிலங்களில் நியூஸ் 18 சிஎன்என் கருத்துக் கணிப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.,
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications