ஆடிட்டர் ரமேஷ் பெயர் சொன்னதுமே கலங்கிய மோடி.. “பழைய பாஜககாரங்க கிட்ட கேளுங்க”.. டிஆர் பாலு பதிலடி!
சென்னை: சேலத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி ஆடிட்டர் ரமேஷ் கொலை குறித்துப் பேசினார். அதோடு, ஜெயலலிதாவை திமுக இழிவு செய்ததாகவும் கூறினார். இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு திமுகவின் டி.ஆர்.பாலு ரிப்ளை கொடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு நேற்று வந்த பிரதமர் மோடி கோவையில் பேரணியாகச் சென்றார். தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

ஆடிட்டர் ரமேஷ் பெயரை சொன்னதும் கண் கலங்கிய மோடி: இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, "நான் இன்று சேலத்தில் கால் வைத்ததும் என் நினைவை உலுக்கியது ஆடிட்டர் ரமேஷ் படுகொலை. சமூக விரோதிகளால் அந்த நேர்மையாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார். கட்சிக்காக உயிரை கொடுத்து உழைத்த ரமேஷை கொலை செய்து விட்டார்கள் சமூக துரோகிகள்." என்றார்.
அப்போது பிரதமர் மோடி லேசாக கண்கலங்கினார். அவரது நா தழுதழுத்தது. சிறிது நேரம் மௌனமாக நின்று அங்கிருந்த கிளாஸில் இருந்த தண்ணீரை அருந்தினார். தொடர்ந்து, அனைவரும் எழுந்து நின்று கட்சிக்காக உயிர் நீத்த அந்த மாபெரும் மனிதர் ரமேஷை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துங்கள்" என்று நா தழுதழுக்க பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து பாஜக தொண்டர்கள் சிறிது நேரம் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "திமுக - காங்கிரஸ் ஆகிய இந்தியா கூட்டணி கட்சிகள் பெண்களை கேவலப்படுத்துவதற்கு தமிழ்நாடுதான் சாட்சி. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது திமுகவினர் எப்படியெல்லாம் இழிவு படுத்தினார்கள் என்பதை நினைத்து பாருங்கள். இதுதான் இவர்களின் உண்மையான முகம்." எனக் கூறினார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது: இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு பதிலடியாக டிஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்துப் பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது தான் சேலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவு கூறுவது ஏன்?
கோவையில் ரோட் ஷோ நடத்திய போது 1998-ல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பாஜக நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.
கேட்டு தெரிஞ்சுக்கோங்க பிரதமரே: ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். "ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்" எனப் பேசியிருக்கிறார் மோடி.
அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அதிமுகவினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.
விட்டா ஜெயலலிதா சமாதிக்கு போய் தியானம் செய்வாரு போல: குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?' என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!" என விமர்சித்துள்ளார் டி.ஆர்.பாலு.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications