துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு
சுகவீனம் காரணமாக துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Recommended Video
சென்னை: திமுக பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறைந்த காலத்தில் 3வது முறையாக அவர் உடல் நல பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் திமுகவினர் சோகமடைந்துள்ளனர்.
அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர் துரைமுருகன். ஒருபக்கம் உணர்ச்சிவசப்படுவது இருந்தாலும், மறுபக்கம் அவருக்கு இருதய தொந்தரவும் இருக்கிறது. கருணாநிதி இறந்த சமயத்தில்கூட மருத்துவமனையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

காய்ச்சல்
தேர்தல் ரிசல்ட் அன்று அதாவது கடந்த 23-ம் தேதி துரைமுருகனுக்கு திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. இதனால் ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

மன உளைச்சல்
வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்ட நிகழ்வில்கூட துரைமுருகன் கலந்து கொள்ளவில்லை. தனது மகனை தேர்தல் களத்தில் நிறுத்த முடியவில்லை என்ற மன உளைச்சலில்தான் இருந்தார் துரைமுருகன்.

உடல்நிலை பரிசோதனை
சிறிது நாட்களாக முன்னர் உடல்நிலை ஓரளவு தேறி இருந்தாலும், காய்ச்சல் மட்டும் இன்னும் குணமாகவில்லை என்பதால், சென்னையிலேயே தங்கி அப்போல்லோவில் உடல்நிலையை சோதனை மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் வந்தன.

பேட்டி
நேற்றுகூட தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்தும், அதிமுக அரசையும் குறை கூறி செய்தியாளர்களிடம் பேசினார் துரைமுருகன். இந்நிலையில், அவருக்கு திரும்பவும் உடல் சுகவீனம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கவலை
இதனால் வழக்கமாக சிகிச்சை மேற்கொள்ளும் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக எம்பிக்கள் நேற்று பதவியேற்ற சந்தோஷம் அடங்காத நிலையில், துரைமுருகன் ஆஸ்பத்திரியில் உள்ளது, தொண்டர்களுக்கு கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications