3 மணி நேரம் அனுமதி வாங்கிட்டு.. 3 நிமிஷம் தான் பேச முடிஞ்சதா? வாட் ப்ரோ! விஜயை விட்டு விளாசும் திமுக
சென்னை: ப்ரோ விஜய்.. 3 மணி நேரம் பேச அனுமதி வாங்கி 3 நிமிஷம் தான் பேச முடிஞ்சதா? என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேச்சை திமுக இளைஞரணி செயலாளர் ராஜிவ் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
ராஜிவ் காந்தி செய்துள்ள போஸ்டில், Sorry ப்ரோ விஜய்.. 3 மணி நேரம் பேச அனுமதி வாங்கி 3 நிமிஷம் தான் பேச முடிஞ்சதா? என்ன பண்ண...கேமரா, கேரவன், மேக்கப், சம்பளம் இல்லாம களத்துக்கு வந்தா அப்டித்தான் ப்ரோ ... வெயில் அடிக்கும் வியர்க்கும்... What Bro... That's wrong Bro, என்று கிண்டலாக போஸ்ட் செய்துள்ளார்.

விஜய் பேச்சு
இன்று விஜய் 3 நிமிடங்களுக்கு குறைவாகவே பேசினார். முன்னதாக விஜய் தனது பேச்சில், மாடப்புரம் அஜித் குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். சாதாரண குடும்பத்திற்கு நடத்த கொடுமைக்கு நீதி வேண்டும். ஏற்கனவே சாரி சொல்லிட்டீங்க - 24 பேரின் குடும்பத்துக்கும் சாரி சொல்லிடுங்க. அஜித் குமார் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்தது போல இங்கேயும் கொடுங்கள். சாத்தான்குளம் மரணத்தை விமர்சனம் செய்தீர்களே.. இப்போது நீங்கள் செய்வது என்ன சார்?
அதே ஆர்எஸ்எஸ் உடன் கைகோர்த்து இருக்கும் சிபிஐ கிட்ட போய் ஏன் ஒளிஞ்சுக்கிட்டீங்க? ஏன் எஸ்ஐடி அமைக்கவில்லை?. ஒன்றிய அரசின் ஆட்சிக்கு பின் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள். உங்களை நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா நீங்க எதுக்கு சார்?. உங்க ஆட்சி எதுக்கு சார்? சிஎம் பதவி எதுக்கு சார்?
உங்களிடம் பதில் இருக்காது- நீங்கள் சாரிதான் சொல்வீர்கள். நீங்கள் சாரி மட்டும்தான் சொல்ல முடியும்.. உங்களால் வேறு என்ன சொல்ல முடியும்.. உங்கள் ஆட்சி சாரி மாடல் ஆட்சியாக மாறிவிட்டது., என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி உள்ளார்.
விஜய் பேரணி
சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக 16 நிபந்தனைகளுடன் பேரணிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். இந்த பேரணியில் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் மேடை ஏற்றினார். மேடையிலேயே தமிழக அரசுக்கும், கஸ்டடி மரணங்களுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சுமார் 5 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொண்டு உள்ளனர். அஜித் குமார் மறைவிற்கு நீதி வேண்டி பேரணி நடத்த உள்ளார் விஜய். ஏற்கனவே லாக் அப் மரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பங்கேற்று வருகின்றன.
இந்தப் பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக போராட்டம் நடத்த அனுமதி கோரிய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சென்னை கமிஷனர் அருண் இதை மறுத்து இருந்தார் .
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications