ஒரே முடிவை எடுத்த தவெக, திமுக.. தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி திமுக, தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் (SSR) தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

Election commission

இந்தக் கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட 13 கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். திமுக சார்பில் எம்.எல்.ஏ ஆஸ்டின், முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். தவெக சார்பில் அமைச்சர் நிர்மல்குமார், அதிமுக சார்பில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைக் கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஐ(எம்), மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி கட்சிகளான, தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து விட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட 74 லட்சம் பேரை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எஸ்ஐஆர் நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தியுள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மொத்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான 13 கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை. 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அவர்களில் 9 கட்சிகள் வெளியேறின. அதிமுக, பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

நாடு முழுவதும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பெரும்பாளான கட்சிகள் வெளிநடப்பு செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+