விஜய்யை பார்த்து ரேம்ப் வாக் அமைத்தோமா.. கொஞ்சம் 2021 திருச்சி மாநாட்டை பாருங்க.. தவெகவுக்கு பதிலடி!
சென்னை: விஜய்யை பார்த்து திமுகவும் ரேம்ப் வாக் மேடை அமைத்ததாக தவெகவினர் பேசி வந்த நிலையில், திமுகவினர் 2021 திருச்சி மாநாட்டின் வீடியோக்கள் மூலமாக பதிலடி கொடுத்து வருகின்றனர். அப்போதே பிரத்யேக பாடம், ரேம்ப் வாக் மேடை, டிரோன் வீடியோ உள்ளிட்டவற்றை அமைத்து திமுக டிரெண்ட் செட்டராக இருந்ததாக விஜய் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில் திமுக தரப்பில் தொடர்ச்சியாக பல்வேறு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞரணி சார்பாக திருவண்ணாமலையில் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து திருப்பூர் மற்றும் தஞ்சாவூரில் மகளிர் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று விருதுநகரில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

தேர்தலுக்கு தயாரான திமுக
திமுக இளைஞரணியில் மட்டும் 5 லட்சம் நிர்வாகிகள் மற்றும் 50 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இதனிடையே இளைஞரணியின் 200 பேச்சாளர்களை கொண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் பொதுக்கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதன் மூலமாக திமுக தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருவதாக பார்க்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்த மேடையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கொள்கை, கோட்பாடு, லட்சியம் என்றால் என்னவென்றே தெரியாத வெற்றிக்கூச்சல் போடும் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டில் சுற்றுகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை.. அவர்களால் அவர்களுக்கே எந்தப் பயனும் இல்லை. அரசியல் அறிவே இல்லாத அட்டைகள் என்னதான் உளறினாலும் களத்தில் நின்று வெல்லப் போவது திமுக தான் என்று பேசி இருந்தார். இதன் மூலமாக விஜய்யை மறைமுகமாக சாடியதாக பார்க்கப்பட்டது.
விருதுநகர் இளைஞரணி கூட்டம்
இதனிடையே நேற்று விருதுநகரில் திமுக இளைஞரணி கூட்டத்தில் ரேம்ப் வாக் மேடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. அதில் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களை அருகில் சென்று சந்தித்தார். இதையடுத்து தவெக தரப்பில் விஜய்யை பார்த்து திமுக காப்பி அடிக்கிறது என்று கூறி விமர்சித்தனர். விஜய்யை போல் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் முதல்வர் ஸ்டாலின் அணிவதாகவும் கூறினர்.
தவெகவுக்கு கொடுத்த பதிலடி
இதற்கு திமுக பதிலடி கொடுத்து வருகிறது. அதாவது 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி மாவட்டம் சிறுகானூரில் தமிழக விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுக பொதுக்கூட்டம் நடத்தியது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தான் ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை, விடியல் பேருந்து பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
யார் காப்பி கேட்?
இந்தப் பொதுக்கூட்டத்திலேயே ஸ்டாலின் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்க ரேம்ப் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் வீடியோக்களை பகிர்ந்து, தவெக தலைவர் விஜய் தான் காப்பி அடித்திருக்கிறார் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவில் இருந்து ரீமேக் செய்வதை போல் திமுகவின் ஸ்டைல் மற்றும் அரசியலையும் காப்பி அடித்திருப்பதாக பதிலடி கொடுக்கின்றனர்.
-
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications