ஸ்டாலின் பெயரை சொன்னாலே.. டெல்லி சும்மா அதிருதுல்ல.. திமுக பெருமிதம் #TNopposeCAA
சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தாங்கள் நடத்திய பேரணியால் சென்னை குலுங்கியது, டெல்லி அதிர்ந்தது என்று திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது.
அத்தோடு நில்லாமல் பெயர் மு.க.ஸ்டாலின் என்றும் அவர்கள் டேக் செய்து பெயரைச் சொன்னாலே சும்மா அதிருதுல்ல என்று ரஜினி ஸ்டைலில் ஒரு வீடியோ போட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் இன்று சென்னையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. அதேசமயம், போராட்டங்களைத் தடுக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், தடையை மீறி பேரணி நடந்தால் வீடியோவில் படம் பிடிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
'குலுங்கியது சென்னை - அதிர்ந்தது டெல்லி'#TNopposeCAA pic.twitter.com/wkYa42xWlI
— DMK (@arivalayam) December 23, 2019
இந்த நிலையில் இன்று திமுக பேரணி திட்டமிட்டபடி நடந்தது. சென்னை எழும்பூர் தாளமுத்து மாளிகையிலிருந்து புறப்பட்ட பேரணி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போய் முடிவடைந்தது. நீண்டு நெடிய சாரைப் பாம்பு போல வளைந்து நெளிந்து போன பேரணியால் சென்னையின் ஒரு பகுதி ஸ்தம்பித்தது.
இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்தியது தொடர்பாக ஒரு வீடியோவை திமுக தனது டிவிட்டரில் போட்டுள்ளது. அதில் பேரணியை படம் பிடித்து இடம் பெறச் செய்துள்ளனர். மேலும், சென்னை குலுங்கியது டெல்லி அதிர்ந்தது.. பெயர் மு.க.ஸ்டாலின் என்று போட்டுள்ளனர். இதன் மூலம் ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே டெல்லி அதிருதுல்ல என்று அவர்கள் மறைமுகமாக கூறியுள்ளதாகவே உணர முடிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications