எடப்பாடி பேசியபோது அதிமுக மேடையில் தோன்றிய உதயநிதி ஸ்டாலின்.. மானம், வெட்கம் இருக்கா? சரமாரி அட்டாக்
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு விலக்குக்கு போடப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை அதிமுக பிரசார கூட்டத்தில் ஒளிபரப்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து மதுராந்தகத்தில் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பேசியதாவது:-

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டும். தேர்தல் என்ற போரிலே எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக்கொடியை நாட்ட வேண்டும். எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பாக திமுகவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டணி வைக்க ஒரு மாதம் பேசினார்கள். வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் காங்கிரஸ் வேட்பாளரை அறிவித்தார்கள். அந்த அளவுக்குதான் கூட்டணி இருந்தது.
ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் சொன்னாங்க.. நீட் தேர்வை ரத்து செய்ய முடியல. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு சூடு, சுரணை எதாவது இருக்குதா என்று கேட்டாங்க.. இப்போ நாடாளுமன்ற தேர்தல் நடந்து 5 வருஷம் ஆகிவிட்டது. அடுத்த கட்ட தேர்தல் வந்துவிட்டார். நீங்கள் ஆட்சிக்கு வந்தும் 3 வருஷம் ஆகிவிட்டது.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்துவிட்டீர்கள் என்று சொன்னீங்க. எங்க ரத்து பண்ணியிருக்கீங்க.. வீடியோவை போட்டு காட்டுங்கப்பா.. என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை அதிமுகவினர் திரையில் போட்டு காண்பித்தார்கள். இதில் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின், "திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது என்றால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். எங்களுக்கு தெரியும் எப்படி ரத்து செய்ய வேண்டும் என்று.
நம்ம தலைவருக்கு தெரியும். இத சொன்னால் கூட இந்த ஆட்சியாளருக்கு சொந்த புத்தியே கிடையாது. அத எப்படி பண்ணுவீங்கன்னு சொல்லுங்க.. ரகசியத்தை சொல்லுங்க.. ரகசியத்தை சொல்லுங்க.. என்றனர். ஒரே ஒரு ரகசியம் தான்.. அந்த ரகசியத்தை இப்போது சொல்கிறேன். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை.. மாணவர்கள் மீது ஒரு நம்பிக்கை.. தமிழக மக்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்" என்று பேசுகின்ற வீடியோ திரையிடப்பட்டது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆகவே நாங்க கேட்கிறோம்.. உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் இருக்குதா?... நீங்க கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா?.. அப்பாவுக்கும் மகனுக்கும் சூடு சொரணை இருக்க்கிறதா? இப்படி நாட்டு மக்கள் கேட்கிறார்கள் ஸ்டாலின் அவர்களே.. பதில் சொல்லுங்க.... இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications