"நீ அங்கே.. நான் இங்கே".. சொல்லி அடித்த ஸ்டாலின்.. வெச்சு செய்ய போகும் உதயநிதி.. அதிரடி போட்டி..!
உதயநிதி எங்கு போட்டியிடுவார் என்ற ஆவல் ஏற்பட்டு வருகிறது
சென்னை: திமுகவின் உடன்பிறப்புகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது.. திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பும், எதிர்பார்ப்பும் எகிறி கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் எதிர்பார்த்தபடியே கொளத்தூரில் முக ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
சேப்பாக்கத்தை பொறுத்தவரை மிக சிறிய சட்டப்பேரவை தொகுதியாகும்.. இங்கு சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கிறார்கள்..
அதுபோலவே ஆயிரம் விளக்கு தொகுதியும் சொல்லலாம்.. எந்த தேர்தல் வந்தாலும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவும் இவர்கள்தான் இருக்கிறார்கள்.

ஆயிரம் விளக்கு
சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு இரண்டுமே திமுகவின் கோட்டையாக உள்ளது.. கலைஞருக்கு நெருக்கமான தொகுதி சேப்பாக்கம்.. ஸ்டாலினுக்கு நெருக்கமான தொகுதி ஆயிரம் விளக்கு.. கொளத்தூருக்கு முன்பு ஸ்டாலினின் பெரும்பாலும் தொகுதி ஆயிரம்விளக்குதான். இந்த முறை இந்த தொகுதிகளுக்கு பாஜக குறி வைத்து கொண்டிருந்தது.. ஆனால், அதிமுக விட்டுத்தரவில்லை.. மாறாக, பாமகவுக்கு ரூட்டை மாற்றி விட்டுள்ளது.. இதுவே திமுகவுக்கு முதல் பலத்தை சேர்த்து வருகிறது..!

சேப்பாக்கம்
சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு என்ற 2 தொகுதிகள்ல ஏதாவது ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்படலாம் என்று கருதப்பட்டது.. சேப்பாக்கத்தில் போட்டியிட வேண்டும் என்று குஷ்பு விரும்பியது இதற்காகத்தான்.. நேரடியாகவே உதயநிதிக்கு அவர் சவால் விட்டிருந்தார். ஆனால், குஷ்புக்கு சேப்பாக்கம் ஒதுக்கப்படவில்லை.

ஸ்டாலின்
அதேபோல, ஆயிரம் விளக்கு தொகுதியில் தன்னுடைய செல்வாக்கை ஸ்டாலின் தடுப்பதாகவும், அந்த தொகுதியில் தன் மகனை போட்டியிட வைக்க முயற்சிப்பதாகவும், அதனாலேயே தாம் கட்சியை விட்டு வெளியேறியதாகவும் கு.க. செல்வம் ஏற்கனவே ஒரு பகிரங்க குற்றச்சாட்டை வைத்துவிட்டு போனார். அதனால், ஆயிரம் விளக்கு தொகுதியிலும் உதயநிதி நிறுத்தப்படலாம் என்றும் சொன்னார்கள்.

போட்டி
இதில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் உதயநிதிக்கு சாதகமான சூழலே ஏற்படும் என்று தெரிகிறது.. அடிப்படையிலேயே இவைகள் திமுகவுக்கு சாதகமுள்ள தொகுதிகள்.. 1996, 2001, 2006 என்று தொடர்ந்து இந்தத் தொகுதியில் கலைஞர் வெற்றி பெற்றுள்ளார்... அதேபோல, 2011, 2016 ஆகிய 2 சட்டமன்ற தேர்தல்களிலும் ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார். சிறுபான்மையினர் ஒரு பக்கம் நிரம்பி வழிகிறார்கள்.. சிறுபான்மையினர் பெரும்பாலும் தேர்தல் சமயத்தில் திமுகவுக்கே சாதகமாக இருப்பவர்களும்கூட..

எதிர்பார்ப்பு
அதுமட்டுமல்ல, இளைஞரணியில் தலைவர் ஸ்டாலின் இருந்தபோது, இந்த தொகுதிக்கு எப்படியெல்லாம் பணிகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்தாரோ, அதுபோலவே, உதயநிதியும் செய்து வருவதாக சொல்கிறார்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது தேர்தல் பிரசாரங்கள் பெருமளவு வரவேற்பை பெற்று வருவதும், இளைய தலைமுறைக்கு நம்பிக்கையை தந்து வருகிறது.. இந்த சமயத்தில்தான், சேபாக்கத்தில் உதயநிதி நிறுத்தப்பட்டுள்ளார்.. கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.. இதனால் தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி!












Click it and Unblock the Notifications