வேட்டியெல்லாம் இல்லை.. பேன்ட் சட்டையில் "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்".. கெத்தாக பதவியேற்பு
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக இன்று பதவியேற்று கொண்டார்
சென்னை: "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று சொல்லி முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார் உதயநிதி ஸ்டாலின்..!
Recommended Video
சென்னை: "உதயநிதி ஸ்டாலினும் எனும் நான்" என்று சொல்லி முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார் உதயநிதி ஸ்டாலின்..!
9 மணிக்கு முன்னதாகவே, புதிய உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கம் வர ஆரம்பித்துவிட்டனர்.. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவசங்கர், மற்றும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகிய இருவர் மட்டும் வரவில்லை..
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதால், இருவரும் இந்த பதவியேற்பு விழாவில், பங்கேற்கவில்லை... அதனால் சிகிச்சை முடிந்துவந்து பதவியேற்று கொள்வார்கள் என்று தெரிகிறது.

ஸ்டாலின்
முதல்வர் வந்தபோது, அவருக்கு பூங்கொத்து தந்து வரவேற்கப்பட்டது.10 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கியது.. முதலில் முதல்வர் முக ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்று கொண்டார்.. "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று சொல்லி பதவியேற்று கொண்டார்.. பிறகு "கடவுள் அறிய" என்று சொல்லி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்று கொண்டார்.. இப்படியே ஒவ்வொருவரும் அகரவரிசைப்படி பதவியேற்று கொண்டனர்..

டிஆர்பி ராஜா
அதன்படி உதயநிதி ஸ்டாலினும் எம்எல்ஏவாக பொறுப்பேற்று கொண்டார்.. பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பேன்ட் - சட்டையில் கெத்தாக வந்திறங்கினார் உதயநிதி.. இவருடன் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் வந்திருந்தார்.. இருவருமே ஒரே காரில் தான் வந்திறங்கினர்.. இருவருமே வெள்ளை கலர் சட்டை, கிரே கலர் பேன்ட் மற்றும் மாஸ்க்குடன் காரில் இருந்து இறங்கியதும், இவர்களின் ஆதரவாளர்கள் குஷியானார்கள்..

உதயநிதி
அரங்கிற்குள் சென்றும், இருவரும் பக்கத்து பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தனர். அப்போது, பதவியேற்க உதயநிதியின் பெயர் சொல்லி, தற்காலிக சபாநாயகர் அழைத்ததுமே, சட்டசபையில் அபார கரகோஷம் எழுப்பப்பட்டது.. அப்போது, ஸ்டாலினும் மேஜையை தட்டி வரவேற்றார்.. விறுவிறுவென நடந்து சென்ற உதயநிதி, மைக்கை பிடித்து, "உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்" என்று சொல்லி பதவியேற்று கொண்டார்..

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இதுபோலவே, மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும், உதயநிதியின் நெருங்கிய நண்பரும் திருவெறும்பூர் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பதவியேற்று கொண்டனர். முதல்முறையாக எம்எல்ஏவாக பதவியேற்கும் உதயநிதியை காண ஏராளமானோர் ஆர்வம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்ஏக்கள்
அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை வேட்டி - சட்டை என்ற பழக்கவழக்கம் காலங்காலமாக இருந்து வரும் நிலையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி, டிஆர்பி ராஜா போன்ற இன்றைய இளம் எம்எல்ஏக்கள், எப்போதும் போலவே இன்றைய தினமும் பேன்ட்- சட்டையுடன் வந்து பதவியேற்று கொண்டது பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications