Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன? உங்களால் குனிய முடியலையா? அதிமுகவில் இருந்துட்டு இப்படி பேசலாமா? உதயநிதி செம கிண்டல்!

தமிழகத்தில் ஒரு முந்திரிக்கொட்டை அமைச்சர் இருக்கிறார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இரண்டு அடிமைகள் இருக்கிறார்கள், ஒருவர் தர்மயுத்த அடிமை, இன்னொருவர் தவழ்ந்து செல்லும் அடிமை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேசியுள்ளார்.

கரூரில் திமுக சார்பாக நேற்று நடைபெற்ற கூட்டம் தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுக கட்சி சார்பாக கரூரில் முக்கிய விழா நடைபெற்றது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதில் பேசியதுதான் இப்போது ஹாட் டாப்பிக்.

சட்டமன்ற உறுப்பினரும் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி மூலம் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாற்று கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பலர் திமுகவில் இணைந்தார்கள். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதில் அதிமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

எப்படி அமைச்சர்கள்

எப்படி அமைச்சர்கள்

தமிழகத்தில் அமைச்சர்கள் மிக மோசமான நிர்வாகத்தை செய்து வருகிறார்கள். ஒரு அமைச்சர் இருக்கிறார், அவர் ஒரு சின்ன பையனை கூப்பிட்டு தனக்கு செருப்பு அவுத்துவிட சொன்னார். நீங்க அந்த வீடியோ பார்த்து இருப்பீங்க. குட்டி பையன் அவர். அவரை பெயரை கூட சொல்ல கூடாது . அதற்க்கு காரணம் கேட்டால் அவர் என்ன தெரியுமா சொல்கிறார்? என்னால் குனிய முடியவில்லை என்று கூறியுள்ளார் . இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு .

அதிமுக எப்படி

அதிமுக எப்படி

அதிமுகவில் இருந்து கொண்டு ஒருவரால் குனிய முடியவில்லை என்று கூறினால் நம்புவீர்களா? அதிமுகவில் இருந்து நீங்கள் வாங்கிய பதவியும் பிச்சை போல குனிந்து குனிந்து வாங்கியதுதான். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி குனிந்து குனிந்து நாற்காலிக்குக்குள் சென்றார் என்று நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இவர்கள் எல்லாம் எப்படி குனிந்து வளைந்து பதவிகளை பெற்றார்கள் என்று உலகத்திற்கே தெரியும்.

எப்படி குனிந்தார்

எப்படி குனிந்தார்

தமிழகத்தில் மொத்தம் இரண்டு அடிமைகள் இருக்கிறார்கள். ஒருவர் தர்மயுத்த அடிமை. சில நாட்கள் தர்மயுத்தம் செய்கிறேன் என்று இவர் சுற்றிக்கொண்டு இருந்தார். இன்னொருவர் தவழ்ந்து செல்லும் அடிமை. இவர்களை கட்டுப்படுத்த மாஸ்டர் ஒருவர் டெல்லியில் இருக்கிறார். அவர்தான் பிரதமர் மோடி. இதுதான் தமிழகத்தில் அதிமுக அரசின் மிக மோசமான நிலை.

பெரிய அடிமை

பெரிய அடிமை

டெல்லி மூன்று மாதங்களாக அமைதியாகப் போராட்டம் நடைபெற்று வந்தது. ஆனால் அங்கு பாஜக உறுப்பினர்கள் வெறுப்பு பேச்சு மூலம் கலவரத்தை தூண்டிவிட்டார். இதனால் அங்கு வன்முறை உருவானது. அவர் வெறுப்பு பேச்சு பேசிய மறுநாளே வன்முறை உருவானது. இதில் 50 பேர் வரை கொல்லப்பட்டனர். இதுதான் பாசிச பாஜக அரசின் உண்மை முகம். அதேபோல்தான் அதிமுக அடிமை அரசும் தமிழகத்தை மாற்ற துடித்துக் கொண்டு இருக்கிறது, என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கடந்த சில நாட்களுக்கு முன் முதுமலை யானைகள் முகாமுக்கு சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டிவிட சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். எனக்கு வயதாகிவிட்டது. அந்த சிறுவன் என் பேரன் போல இருக்கிறார் என்பதால்தான் எப்படி செய்ய சொன்னேன், என்று அவர் விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+