Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டக்குனு வேளாங்கண்ணி வீட்டுக்குள் நுழைந்த உதயநிதி.. ஆனால் "அந்த" போட்டோவை பார்த்ததுமே.. செம சர்ப்ரைஸ்

உதயநிதி ஸ்டாலின், திமுகவின் மகளிர் அணி நிர்வாகி வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறுபடியும் ஒரு ஸ்வீட் ஷாக் தந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.. இதனால் திமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கு புதுவித தெம்பும், நம்பிக்கையும் துளிர்த்துள்ளது..!

ஒரு எம்எல்ஏ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.. பதவி ஏற்று கொண்டதில் இருந்தே, தொகுதிக்குள் அவரது செயல்பாடுகள் அப்படித்தான் இருந்து வருகிறது.

இப்படியெல்லாம் பம்பரமாக சுழல்வதை பார்த்து, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பை தந்துவிடுங்கள், அல்லது மேயர் பதவியை தந்துவிடுங்கள் என்று சொந்த கட்சிக்காரர்களே மனமுவந்து சொல்லும் அளவுக்கு சேப்பாக்கத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறார்.

சிகிச்சை

சிகிச்சை

இப்போது உதயநிதி குறித்த ஒரு செய்தி வெளியாகி உள்ளது.. சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அமைப்பாளர் வேளாங்கண்ணி.. இவரது கணவருக்கு உடம்பு சரியில்லை.. இருதய நோயாளி.. அதனால் சிகிச்சை முடிந்து வீட்டில் உள்ளார்.. இவரை சென்று நலம் விசாரித்து வரும்படி, திமுக தலைமை உதயநிதியிடம் கேட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

உதயநிதி

உதயநிதி

அதனால், வேளாங்கண்ணி வீட்டுக்கு சென்றிருக்கிறார் உதயநிதி.. அங்கு போனதில் இருந்தே உதயநிதிக்கு ஷாக் மேல ஷாக் கிடைத்தது.. காரணம், வேளாங்கண்ணியின் வீடு ஒரு குடிசை வீடு.. அடைப்பாக காணப்பட்ட அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே உதயநிதி வீட்டை பார்த்துள்ளார்.. கட்சியில் இத்தனை வருஷம் பாடுபட்டு உழைத்த மகளிர் அணி அமைப்பாளர் இப்படிப்பட்ட வீட்டில் தங்கி உள்ளாரா? என்ற வியப்புடனேயே உள்ளே நுழைந்தார்.

உதயநிதி

உதயநிதி

அவரை வரவேற்று உட்கார வைத்தார் வேளாங்கண்ணி.. அங்கிருந்த வேளாங்கண்ணியின் கணவரிடம் உடல்நிலை குறித்து உதயநிதி விசாரித்தார்.. சிறிது நேரம் பேசிக் கொண்டே இருந்தபோது, வீட்டில் மாட்டியிருந்த சில போட்டோக்களை உதயநிதிக்கு காண்பித்துள்ளார் வேளாங்கண்ணி.. சுவரில் நிறைய போட்டோக்கள் இருந்தன.. ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டே வந்த உதயநிதிக்கு இன்னொரு ஷாக் காத்திருந்தது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அங்கிருந்த ஒரு போட்டோவில் கலைஞர் கருணாநிதி இருந்தார்.. உற்று பார்த்தபிறகுதான் தெரிந்தது, வேளாங்கண்ணிக்கு கல்யாணம் செய்து வைத்ததே கலைஞர்தானாம்.. அவர் தலைமையில்தான் திருமணம் நடந்துள்ளது.. இதற்கு பிறகு உணர்ச்சிவசப்பட்டுள்ளார் உதயநிதி.. வேளாங்கண்ணி தம்பதியிடம், "உங்களுக்கு என்ன உதவியா இருந்தாலும் உடனே எனக்கு சொல்லுங்க.. தயங்காமல் கேளுங்க.. செய்து தருகிறேன்.. நீங்கள் எல்லாம் இந்த கட்சிக்காக உழைத்தவர்கள்.. உங்களை காப்பது எங்கள் கடமை" என்று சொல்லிவிட்டு சென்றாராம்.

அழகிரி

அழகிரி

இது 4 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்றாலும், உதயநிதியின் இந்த நம்பிக்கை வார்த்தைகள், உடன்பிறப்புகளுக்கு பூரிப்பையும், உற்சாகத்தையும் தந்து வருகிறது.. இது அப்படியே முக அழகிரியின் ஸ்டைல் ஆகும்.. அழகிரி இப்படித்தான், கடைக்கோடி தொண்டனும் மேலே வரணும், நல்லா இருக்கணும் என்று மனசார விரும்புபவர்.. பலரை "கை" கொடுத்து உயர்த்தியும் விட்டவர்.. "நீயும் மேலே வரணும்ய்யா" என்று அவர்களுக்கு உரிமையாய் தெம்பூட்டுபவர்.. அதே ரூட்டை உதயநிதியும் பிடித்துள்ளது திமுகவில் நெகிழ்வை கூட்டி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+