திமுக- விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் விரிசல்..?
Recommended Video
சென்னை: திமுக விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
மக்களைவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தேர்தல் முடிவு வெளியாகி சுமார் 2 மாதங்கள் ஆகும் நிலையில், திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், குறிப்பிட்டு கூறப்படுவது, ஆளுந் ஷாநவாஸ் பேச்சு தான். விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கடந்த வாரம் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திமுகவை விமர்சிக்கும் தொனியில் வெளிப்படையாக பேசியிருந்தார்.
என்.ஐ.ஏ.மசோதா விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல என்பதுடன் அதுபற்றி விமர்சிக்காமல் கள்ளமவுனம் காக்க முடியாது என பேசியிருந்தார். இத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை, என்.ஐ.ஏ.மசோதாவுக்கு திமுக ஆதரவளித்ததால் அந்தக் கட்சி காலத்திடம் பதில் சொல்ல வேண்டும் என பேசினார்.
அப்படியென்றால் திமுக தோற்கும் எனக் கூறுகிறாரா இவர், யாருடைய கருத்தை ஷா நவாஸ் தெரிவித்திருக்கிறார் என வி.சி.க.தலைமையிடம் திமுக கேள்வி எழுப்பியதாம்.
ஷா நவாஸ் பேச்சு, திமுகவுக்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டி விடும் வகையில் அமைந்துவிட்டதால் திருமா மீது ஸ்டாலின் அதிருப்தியில் உள்ளாராம். இந்தக்காலத்தில் யாருக்கு என்ன உதவி செய்தாலும் நன்றி என்பது இல்லையே என்ற குரல் அறிவாலய வட்டாரத்தில் ஒலிக்கிறது. ஆனால் என்ஐஏ திருத்த மசோதாவுக்கு ஆதரவாக திமுக வாக்களித்த விவகாரத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பொதுவாகவே திமுக மீது அதிருப்தி நிலவுகிறது என்பதையும் மறுக்க முடியாது.
-
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு! ஸ்டாலின் சொன்ன மேஜர் அறிவிப்பு! திமுக சிக்ஸர் வாக்குறுதி -
DMK Manifesto: மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 உயர்வு! 8ஆவது ஊதியக் குழு அமல்! ஸ்டாலின் அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி












Click it and Unblock the Notifications