"அறம் சீறும்".. சனாதனம் வீழும்.. பாஜகவை விரட்டினோம்.. அணி திரட்டினோம்.. திருமா ஆவேசம்
சனாதனத்துக்கு எதிராக திருமாவளவனின் ட்வீட் வைரலாகிறது
சென்னை: "அதிமுக_பாஜக அணிக்கு எதிராகத் திரட்டியதிலும் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு #முதன்மையானது! சனாதனிகளை வீழ்த்துவதும் விரட்டியடிப்பதுமே #நமக்கான_வெற்றி. #அறம்_சீறும்! #சனாதனம்_வீழும்!" என்று விசிக தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் விசிகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தபோது ஏராளமான வதந்திகள் பரவின.. திருமாவவன் கூட்டணியை சிதைக்க போகிறார்.. வெளியே வர போகிறார்.. விசிக தனித்து கழட்டி விடப்படுகிறது என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
அதுமட்டுமல்ல, விசிகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டபோது, அது திருமாவுக்கும், விசிகவினருக்கும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும்கூட சொல்லப்பட்டன.

விசிக
ஆனால், திருமாவளவன் அதுகுறித்து பேசும்போது, "விசிக 6 தொகுதிகளை வாங்கவில்லை, 6 எம்எல்ஏக்களை வாங்கியுள்ளோம், எனக்கு பேரம் பேச வலிமை இல்லை.. அதிமுக, பாஜகவுடன் பேரம் பேச நினைத்திருந்தால் இதையே காட்டி பேரம் பேசியிருக்கலாம். வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசியபின் பேரம் பேச தெரியாது..

6 சீட்
நான் இந்த 6 சீட் வாங்க காரணமே, பாஜகவை இங்கே காலூன்ற விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான்.. பாஜக சின்ன கட்சிதானே, அந்த கட்சிக்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறது என்று கணக்கு போடாதீங்க.. இங்குதான் நாம் விழிப்பாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல ஒவ்வொரு பிரச்சாரத்திலும் திருமாவளவன் ஒரே ஒரு விஷயத்தை பற்றியே திரும்ப திரும்ப பேசினார்.

பாஜக
"பாஜக 20 சீட் என்றதுமே, அது திமுகவின் தொகுதிகள் என்று உறுதியாகிவிட்டது.. 20-ல் ஒன்றில்கூட பாஜக வெற்றி பெறாது.. அதற்கு காரணம் அந்த கட்சி தன் கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ய முடியாது.. சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாது.. வெறுப்பு அரசியலை நம்பி யாரும் ஓட்டு போட முடியாது.. முக்கியமா, தமிழ்நாட்டில் இவங்க வாலாட்டவே முடியாது" என்ற திருமாவளவனின் பிரச்சார பேச்சுக்கள் சூடுபிடித்தன.

திமுக
உண்மையை சொல்லப்போனால், திமுக கூட்டணிக்கு திருமாவளவனின் பேச்சுக்கள் மிகுந்த பலத்தை தந்தன.. நம்பிக்கையை தந்தன.. விசிகவின் பிரச்சாரங்கள், விசிக வேட்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் பலன் தந்ததோ இல்லையோ, ஆனால், திமுக கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட ஒன்றுதான்.. அந்த வகையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து விசிகவினர் மேற்கொண்ட பிரச்சாரங்கள் ஒவ்வொன்றும், இன்று பலனை தந்து வருவதாகவே தெரிகிறது. அதைதான் திருமாவளவன் ஒரு போட்டு உணர்த்தி உள்ளதாகவே தெரிகிறது.

தேர்தல் களம்
அதில், "தமிழக தேர்தல்களத்தைச் சனாதன சக்திகளுக்கு எதிராகத் திருப்பியதிலும் தலித்மக்களைப் பெருவாரியாக #அதிமுக_பாஜக அணிக்கு எதிராகத் திரட்டியதிலும் விடுதலைச் சிறுத்தைகளின் பங்கு #முதன்மையானது! சனாதனிகளை வீழ்த்துவதும் விரட்டியடிப்பதுமே #நமக்கான_வெற்றி. #அறம்_சீறும்! #சனாதனம்_வீழும்!" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னிலை
அதற்கேற்றபடி, காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில், தபால் ஓட்டுக்கள் தொடங்கிய நிலையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலையிலும் உள்ளன. எல்லோரும் வெறுமென தங்கள் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் பாசிச வகுப்புவாத பாஜகவிற்கு எதிராக இங்கு களத்தை அமைத்தோம் என்று என்று சீறும் திருமாவளவனின் ட்வீட் வைரலாகி வருகிறது.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications