வெற்றிமுகத்தில் திமுக... உற்சாகம் கரைபுரளும் அண்ணா அறிவாலயம்.. இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சி..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், திமுக வெற்றிமுகத்தில் உள்ளதால் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Recommended Video
10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரளத் தொடங்கியுள்ளது.
வீதிகள் வெறிச்சோடட்டும் உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் என கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஸ்டாலின் அறிக்கை விடுத்தும் கூட, ஆர்வமிகுதியில் அதனை தொண்டர்கள் கேட்டதாக தெரியவில்லை.

தேர்தல் முடிவுகள்
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆட்சி அமைப்பதற்கு தேவையான எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். ஸ்டாலினையும், கருணாநிதியையும் புகழ்ந்து வாழ்த்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறிக் கொண்டனர்.

திமுக ஆட்சி
10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையிலேயே இருந்த திமுக இப்போது ஆளுங்கட்சியாக மாறவுள்ளது. இதனால் இதனை கொண்டாடி தீர்க்கத் தொடங்கியுள்ளனர் திமுகவினர். சென்னையை போல் தமிழகத்தின் மற்ற இடங்களிலும் பட்டாசுகள் வெடித்து திமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வேண்டுகோள்
இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு என இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் திமுகவுக்கு வெற்றிமுகம் என்ற செய்தி தொண்டர்களை நிலை கொள்ளச் செய்யவில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பழமொழிக்கு ஏற்ப, திமுக முன்னிலை என்ற செய்தி அவர்களை கொண்டாட வைத்துள்ளது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயத்திற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலை சுட்டிக்காட்டி தொண்டர்களை திருப்பி அனுப்பும் பணிகளில் அண்ணா அறிவாலய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications