திமுக vs அதிமுக.. நூலிழையில் வெற்றி தோல்வியை தீர்மானித்த அந்த '17' தொகுதிகள்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 9 திமுக வேட்பாளர்கள் 8 அதிமுக வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேர் வென்றுள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கிறது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் உட்பட மொத்தம் 133 இடங்களில் திமுக வெற்றி வாகையைச் சூடியுள்ளது.
இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராகப் பதவியேற்கிறார். கடந்த 2016 உடன் ஒப்பிடுகையில் இந்தத் தேர்தலில் அதிமுகவிடம் இருந்த 56 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது,

திமுக கூட்டணி
திமுக இந்தத் தேர்தலை எதிர்கொள்ளக் காங்கிரஸ், விசிக, மதிமுக என மொத்தம் 12 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. இதில் திமுக நேரடியாக 173 இடங்களில் களமிறங்கியது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைச் சேர்த்து மொத்தம் 185 இடங்களில் உதய சூரியன் சின்னம் போட்டியிட்டது. இதில் திமுக வேட்பாளர்கள் மட்டும் 37.7% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

அதிமுக கூட்டணி
அதேபோல ஆளும் கட்சியாக தேர்தலை எதிர்கொண்ட அதிமுகவும் பாமக, பாஜக என ஒன்பது கட்சிகளுடன் கூட்டணியை அமைத்திருந்தது. 179 அதிமுக வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 191 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் மட்டுமே வென்றது. கூட்டணிக் கட்சிகளான பாமக ஐந்து தொகுதிகளிலும் பாஜக நான்கு தொகுதிகளிலும் வென்றன.

திமுக vs அதிமுக
கடந்த முறை 89 இடங்களில் வென்றிருந்த திமுக, அதில் 67 இடங்களில் மீண்டும் வெற்றி பெற்றது. அதேநேரம் தன்வசம் இருந்த 14 தொகுதிகளை அதிமுகவுக்கு தாரைவார்த்தது. கடந்த முறை 136 இடங்களில் வென்ற அதிமுக, அதில் 50 இடங்களில் மட்டுமே மீண்டும் வெல்ல முடிந்தது. அதிமுக தனது வசம் இருந்த 56 தொகுதிகளை திமுகவிடம் இழந்துள்ளது.

வாக்கு வித்தியாசம்
இந்தத் தேர்தலில் திமுக மாநில துணைப்பொது செயலாளர் ஐ.பெரியசாமி, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். திமுக வேட்பாளர்கள் 47 பேர் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். அதேபோல எடப்பாடி பழனிசாமி உட்பட மொத்தம் 11 அதிமுக வேட்பாளர்கள் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். மறுபுறம் 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் 9 திமுக வேட்பாளர்கள் 8 அதிமுக வேட்பாளர்கள் என மொத்தம் 17 பேர் வென்றுள்ளனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications