சூடுபிடிக்கும் தேர்தல் களம்! திமுக vs அதிமுக! "நேருக்கு நேர்" மோதும் வேட்பாளர்கள் யார் யார்? லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுகவும் - அதிமுகவும் 8 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. அந்த தொகுதிகள் என்னென்ன என்பதையும், யார் யார் வேட்பாளர்கள் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

7 கட்டமாக நடைபெறும் லோக்சபா தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வரும் ஏப்ரல் 19 -ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று முதல் வேட்பு மனு தாக்கலும் தொடங்கியுள்ளது. இதனால், ஜெட் வேகத்தில் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

DMK vs AIADMK candidates who will face each other head to head List

அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரு சில நிமிட இடைவெளியில் அதிமுகவும் திமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. அதிமுகவில் முதல் கட்டமாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதேபோல், திமுகவோ, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

இதன்படி, தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் 8 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. அந்த தொகுதிகள் என்னென்ன என்பதையும், யார் யார் வேட்பாளர்கள் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

வட சென்னை:
வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். அதிமுகவில் ராயபுரம் மனோ களத்தில் உள்ளார்.

தென் சென்னை:
தென் சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும் அதிமுகவில் ஜெயவர்த்தனும் நேருக்கு நேர் போட்டியிடுகிறார்கள்.

காஞ்சிபுரம்(தனி):
காஞ்சிபுரம்(தனி) தொகுதியில் திமுக சார்பில் ஜி செல்வம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராஜசேகர் போட்டியிடுகிறார்.

தேனி:
தேனியில் திமுக சார்பில் தங்க தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். அதிமுகவில் தேனி தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுகிறர்.

அரக்கோணம்:
அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், அதிமுகவில் ஏ.எல். விஜயனும் நேருக்கு நேர் களம் காண்கின்றனர்.

ஈரோடு:
ஈரோடு தொகுதியில் திமுகவில் பிரகாஷும் அதிமுகவில் ஆற்றல் அசோக்குமாரும் நேருக்கு நேர் தேர்தலை சந்திக்கின்றனர்.

சேலம்:
சேலம் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் செல்வ கணபதியும் அதிமுகவில் விக்னேஷும் போட்டியிடுகிறார்கள்.

ஆரணி:
ஆரணி தொகுதியில் திமுகவில் தரணி வேந்தனும் அதிமுகவில் கஜேந்திரனும் நேருக்கு நேர் போட்டியிடுகிறார்கள்.

அதிமுக தற்போது வரை 16 வேட்பாளர்களின் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது. இன்னும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும், யார்? யார்? போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரம் நாளை தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதனால் திமுகவுடன் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள் இன்னும் அதிகரிக்கும்.

திமுக வேட்பாளர் பட்டியல்:

முன்னதாக இன்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
வட சென்னை - கலாநிதி வீராசாமி
தென் சென்னை - சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்பதூர் -டி ஆர்பாலு
காஞ்சிபுரம் (தனி) - ஜி செல்வம்
அரக்கோணம் - எஸ் ஜெகத்ரட்சகன்
வேலூர் - கதிர் ஆனந்த்
தர்மபுரி - ஆ மணி

திருவண்ணாமலை - சிஎன் அண்ணாதுரை
ஆரணி - எம்ஸ் தரணிவேந்தன்
கள்ளக்குறிச்சி - மலையரசன்
சேலம் - செல்வகணபதி
ஈரோடு - கே ஏ பிரகாஷ்
நீலகிரி(தனி) - ஆ ராசா
கோவை - கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி

பெரம்பலூர் - அருண் நேரு
தஞ்சாவூர் - முரசொலி
தேனி - தங்க தமிழ்செல்வன்
தென்காசி (தனி) - ராணி சிவக்குமார்
தூத்துக்குடி - கனிமொழி

அதிமுக வேட்பாளர் பட்டியல்:

இதேபோல் அதிமுக சார்பில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் - சந்திரஹாசன்
மதுரை - சரவணன்
தேனி - நாராயணசாமி
வட சென்னை - ராயபுரம் மனோ

தென் சென்னை - ஜெயவர்தன்
காஞ்சிபுரம் - ராஜசேகர்
நாமக்கல் - தமிழ்மணி
கரூர் - கே.ஆர்.என். தங்கவேல்

கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ்
அரக்கோணம் - விஜயன்
ஆரணி - கஜேந்திரன்
விழுப்புரம் - பாக்கியராஜ்

சேலம் - விக்னேஷ்
நாமக்கல் - தமிழ்மணி
ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
ராமநாதபுரம் - பா ஜெயபெருமாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+