Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக VS அதிமுக.. சென்னையில் 11 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 164 தொகுதகளிலும், அதிமுக 168 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் சென்னையில் உள்ள 12 சட்டசபை தொகுதிகள் உள்பட மொத்தம் 121 சட்டசபை தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகின்றனர். எந்தெந்த தொகுதிகளில் இருகட்சிகள் இடையே நேரடி போட்டி உள்ளது? என்பதை மாவட்ட வாரியாக இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

dmk-vs-aiadmk-directly-fight-in-121-contituencies-in-tamil-nadu-assembly-election

இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி, பாஜக இருக்கும் அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ராமதாஸ் அணி + சசிகலாவின் கட்சி இடையே 5 முனை போட்டி நிலவுகிறது.

164 தொகுதிகளில் திமுக நேரடியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதிமுக 168 தொகுதிகளில் களமிறங்கும் நிலையில் 150 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே 121 சட்டசபை தொகுதிகளில் நேரடியாக போட்டி ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 12 தொகுதிகள்

குறிப்பாக சென்னையில் மொத்தம் 15 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 12 தொகுதிகளில் நேரடியாக போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக களமிறங்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு மயிலாப்பூர், பாமகவுக்கு சோளிங்கர், அமமுவுக்கு சைதாப்பேட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

சென்னை – சுற்றுவட்டார மாவட்டங்கள்

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மதுரவாயல், அண்ணாநகர், விருகம்பாக்கம், தியாகராயநகர், சோழிங்கநல்லூர், மாதவரம், ஆர்.கே.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், காஞ்சீபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட தொகுதிகளில் நேரடி போட்டி உள்ளது.

வட –கொங்கு மாவட்டங்கள்

விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் தெற்கு, வீரபாண்டி, சேந்தமங்கலம், ஆற்காடு, காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், ஜோலார்பேட்டை, பர்கூர், வேப்பனஹள்ளி, ஓசூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர், செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, வானூர், நாமக்கல், பரமத்தி வேலூர், குமாரபாளையம், பெருந்துறை உள்ளிட்ட தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடி போட்டி உள்ளது.

அதேபோல் பவானி, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், கூடலூர், குன்னூர், தாராபுரம், காங்கேயம், பல்லடம், உடுமலைப்பேட்டை, மேட்டுப்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதிகளிலும் இரட்டைடை இலை - உதயசூரியன் நேரடியாக மோதுகின்றன.

மத்திய - காவிரி டெல்டா மாவட்டங்கள்

நிலக்கோட்டை, திண்டுக்கல், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, முசிறி, பெரம்பலூர், அரியலூர், திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பூம்புகார், வேதாரண்யம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, விராலிமலை, திருமயம், ஆலங்குடி உள்ளிட்ட தொகுதிகளில் நேரடியாக போட்டி நிலவ உள்ளது.

தென் மாவட்டங்கள்

மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், கம்பம், அருப்புக்கோட்டை, திருச்சுழி, பரமக்குடி, முதுகுளத்தூர், விளாத்திகுளம், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கன்னியாகுமரி என இந்த 121 தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+