"தங்கதொர.. ஒரு அளவுக்குத்தான் எல்லாமே": ட்ரோல் வீடியோ.. அட்டகாசம் செய்யும் திமுக, அதிமுக ஐடி விங்ஸ்!
சென்னை: திமுக மற்றும் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணிகள், சோஷியல் மீடியாவில்'ட்ரோல் வீடியோ' வெளியிட்டு சரமாரி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கி நேற்று வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய பாஜக அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.

சட்டசபையில் காரசார விவாதம்: இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது. எடப்பாடி பேசியதற்கு பதில் சொன்ன அமைச்சர் துரைமுருகன், தற்கொலை செய்வதற்கு சமம் நீங்கள் பேசுவது என்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தற்கொலைக்கு சமம் என்ற வார்த்தை சரியானது இல்லை. அப்படிப்பட்ட கட்சியோடு ஏன் நீங்கள் கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "காவிரி பிரச்சினை குறித்து திமுக உறுப்பினர்கள் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். நான் பேசியதை நிரூபிக்கவா? இல்லாதது பொல்லாததை எல்லாம் சொல்லக் கூடாது." என்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "பேசினால் மட்டும் போதுமா? 38 பேரும் சேர்ந்து அவையை ஒத்திவைத்திருக்கலாமே? அப்படி அழுத்தம் கொடுத்ததால்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, காலதாமதம் செய்ததால், மத்திய அரசு மீது நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். துணிச்சலோடு தொடர்ந்தோம். அந்த துணிச்சல், உங்களிடம் இல்லையே?" என்றார்.
துணிச்சலை பற்றி: அதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,"துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன துணிச்சல் என்பது எங்களுக்குத் தெரியும். அதை இங்கு சொல்லி, அவை மரபை மீற வேண்டிய அவசியம் இல்லை." என பதில் அளித்தார். முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் இடையே நடந்த இந்த காரசார விவாதத்தால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
அய்யோ அம்மா விட்டுருங்க 😂 https://t.co/zmY3tNlYjR pic.twitter.com/N2AAQpnYGB
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) October 11, 2023
ஒரு அளவுக்குத்தான் ப்ரோ எல்லாமே: இந்நிலையில், இந்த காரசார விவாததை வைத்து திமுக ஐடி விங், வீடியோ மீம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டது. எடப்பாடி பழனிசாமி பேசியதை, "எல்லாருக்கும் என்னை பார்த்தா எப்படி இருக்குது? எளக்காரமா இருக்குதா? ஒரு அளவுக்குத்தான் ப்ரோ எல்லாமே.. சும்மா சும்மாலாம் நோண்டக்கூடாது ப்ரோ" எல்லாமே" என கிண்டல் மீமில் பேசும் குரலை எடிட் செய்திருந்தனர். "தங்கதொர.. ஒரு அளவுக்குத்தான் எல்லாமே" என விஜய் டிவி ராமர் பேசுவது போல சபாநாயகர் அப்பாவுவிற்கு எடிட் செய்திருந்தனர்.
அய்யோ அம்மா என்னை விட்ருங்க: இதற்கு பதிலடியாக அதிமுக ஐ.டி விங் சார்பில் ஒரு மீம் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சட்டசபையில் நடந்த விவாதங்களில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் பேச்சுகளையும், உதயநிதி பேச்சையும் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர். "அய்யோ அம்மா என்னை விட்ருங்க" என ஒரு சிறுவன் கதறும் குரலை வீடியோவில் சேர்த்து திமுகவை விமர்சித்துள்ளனர்.
ஓரளவுக்கு தான் ப்ரோ 🤣 pic.twitter.com/cw8bHLNwuX
— DMK IT WING (@DMKITwing) October 11, 2023
அண்மையில் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக திமுக ஐ.டி விங், ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் இந்த குரல் யாருடையது?" என்ற கேப்ஷனுடன் முழுநேர ஆசிரியர்களின் போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது பேசியதை பதிவு செய்து இருந்தனர். அதற்கு பதிலடியாக ஐ.டி விங் சமூக வலைதள பக்கத்தில், 'ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்றும் இந்த குரல் யாருடையது? ' என்று ஆடியோவை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், வீடியோ மீம் வாயிலாக இரு கட்சிகளும் மோதிக்கொண்டுள்ளது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் ட்ரோல் வீடியோக்கள் மிகுந்த வரவேற்பைப் பெறும் நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ ஐடி பிரிவுகளே ட்ரோல் வீடியோவில் இறங்கியுள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க, இந்த ட்ரோல் வீடியோ மோதல் தீவிரமடையும் எனத் தெரிகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?












Click it and Unblock the Notifications